சென்னை: விஜய் சினிமாவில் இருந்த காலத்தில் இருந்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரின் ரசிகர் கூட்டம் அரசியலில் அவருக்கு ஆதரவாக மாறியது எப்படி என்பது குறித்து தற்போது நடிகர் நானி பேசி இருக்கும் விஷயம்தான் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற தனது தி பாரடைஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயின் அரசியல் பயணம் குறித்து நானி பேசி இருக்கிறார்.
நடிகர் நானி பேச்சு
விஜயின் அரசியல் வெற்றி அவருடைய ஸ்டார் வேல்யூவால் கிடைத்ததா? என்ற கேள்விக்கு நடிகர் நானி, விஜய் அரசியலுக்கு வந்தபோது இவர் ஒரு பெரிய சினிமா ஸ்டார் என்பதால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டு விட்டார்கள் என்று நினைக்க முடியாது. விஜய்யை தமிழக மக்கள் பல வருடங்களாக பார்த்து பார்த்து அவரை தங்களுடைய குடும்பத்தில் ஒருவரை போலவே நினைக்கும் அளவுக்கு ஒரு நெருக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் விஜய்க்கு இருக்கும் ஆதரவை வெறும் சினிமா வசூல் அல்லது ரசிகர்கள் எண்ணிக்கை உடன் மட்டும் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது என்று சிரித்தப்படியே கூறினார்.
இதற்கு அடுத்த அவர் சொன்ன விஷயம் தான் இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதாவது விஜய் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என்பது பற்றிய சில வீடியோக்களை நானும் இணையத்தில் பார்த்தேன். நான் பார்த்த வரைக்கும் அவர் சட்டமன்றத்தில் கலக்கி கொண்டு இருக்கிறார். அவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை சரியானது என்பதை விஜய் தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய ஆட்சி இன்னும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இதை தான் சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்கிறார்கள். சிலர் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சை கேட்டு நானி மிரண்டு போயிருக்கிறார் அதனால் தான் அவர் இப்படி பாராட்டுகிறார் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சிலர், சட்டசபையில் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்து இருந்தாரே அதைத்தான் கிண்டலாக நானி இப்படி சொல்கிறாரா? என்று கலாய்க்கிறார்கள். இதனாலேயே நானி சொன்ன ஒரு விஷயம் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய் வெற்றி பெற்றதும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நானி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் "விஜய் மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழக மக்கள் தங்களுடைய முடிவை தெளிவாக எடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்" என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார். அதுபோல சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நானி மீண்டும் விஜயை பற்றி பேசி இருப்பது கவனம் பெற்று வருகிறது. இப்படி விஜய் பேச்சு ஒரு பக்கம் இருக்க, நானி தற்போது தனது தி பாரடைஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தி பாரடைஸ் படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நானி ஜடால் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ராகவ் ஜூயால் விக்ரமாதித் என்ற கேரக்டரில் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறார். சோனாலி குல்கர்னி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.சட்டசபை சம்பவம்
நெட்டிசன்கள் விவாதம்
விஜய்க்கு வாழ்த்து பதிவு
தி பாரடைஸ் பட குழு