பாரதிராஜாவுக்கு நடந்தது வேறு.. ஆனால் பாக்யராஜ்க்கு நடந்ததை ஏத்துக்க முடியல.. பார்த்திபன் சொன்ன காரணம்


  • சென்னை: தமிழ் சினிமா கடந்த சில வாரங்களில் சந்தித்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் மறைவு தான். குருவாக இருந்த பாரதிராஜா மறைந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகம் இன்னும் மீளாத நிலையில் அவருடைய உதவி இயக்குனராகவும் சீடராகவும் இருந்த பாக்கியராஜும் திடீரென உயிரிழந்தது அனைவரையும் கலங்க வைத்தது. இந்த இருவருடைய இழப்புகளியிலும் நெருக்கமாக இருந்த ஒருவர் இயக்குனர் பார்த்திபன். அவர் சமீபத்தில் பேசியது அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.

    Advertisement

    பாக்கியராஜ் பார்த்திபன் உறவு

    பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து சினிமாவை கற்றுக் கொண்ட பார்த்திபன் அவரது இறுதி சடங்குகளில் குடும்ப உறுப்பினர் போலவே இருந்து ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார். இறுதி ஊர்வலம் முதல் தகனம் வரை சாந்தனு, பூர்ணிமா ஆகியோருக்கு ஆறுதலாக நின்ற காட்சிகள் பலரையும் கண் கலங்க வைத்தது. அதற்கு பிறகு ஒரு லெட்டர் பேடில் "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்று எழுதி அவரது உடலுடன் வைத்ததும் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல இப்போது பாக்யராஜ் இறப்பிற்கு பிறகு அவர் மீது தனக்கு இருந்த அன்பு குறித்து பார்த்திபன் உருக்கமாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    பாக்யராஜ் பேட்டி

    அதில் பாரதிராஜா சாருக்கு கடைசி நாட்களில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததில் ஹாஸ்பிடலில் அவருக்கு நினைவு இல்லாமல் கூட இருந்தார். அந்த கஷ்டங்களை எல்லாம் பார்க்கும் போது மனசளவில் நாம கொஞ்சம் தயாராகிட்டோம். சில நேரங்களில் இவ்வளவு வேதனை பட்டு அவர் இருக்க வேண்டாம் என்று கூட தோன்றியது. அதனால் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த வேதனை அவருக்கு இனி முடிந்தது என்ற ஒரு உணர்வு இருந்தது.

    ஆனால் பாக்கியராஜ் சார் அப்படி இல்லை முந்தைய நாள் வரை சிரிச்சி பேசினார்.. எல்லோரிடமும் சந்தோஷமாக இருந்தார்.. காலையில் வாக்கிங் போயிட்டு வந்து கொஞ்ச நேரத்துல இப்படி ஒரு செய்தி கேட்கணும்னு யாருமே நினைக்கல. அதனாலதான் அந்த பிரிவை என் மனசு ஏத்துக்க முடியல என்று பார்த்திபன் சொன்னார். அதோடு பாக்யராஜ் உடன் இருந்த தனது உறவைப் பற்றியும் உருக்கமாக பேசினார்.

    Advertisement
    பாக்யராஜ் இறுதி சடங்கில் கடைசி வரை நின்ற பார்த்திபன்.. கண்கலங்க வெளியிட்ட பதிவு! நெகிழ வைத்த வார்த்தை

    கண்கலங்கிய பார்த்திபன்

    எனக்கும் பாக்யராஜ் சாருக்கும் ஒரு வித்தியாசமான பந்தம் இருந்தது. சிலர் சும்மா தூரத்தில் சொந்தம்னு சொல்லுவாங்க ஆனா நான் அவருக்கு தூரத்து பந்தம். நான் தூரத்தில் இருந்தாலும் அவருடன் நெருக்கமாக தான் இருந்தேன். அவர் திடீரென்று எனக்கு போன் செய்து அவருடைய பேச்சு வழக்கில் என்னப்பா என்று சொன்னால் கூட நான் உடனே போனை கட் பண்ணி விட்டு அவரிடம் நேரில் சென்று என்ன சார் என்று கேட்பேன். அதுதான் எனக்கும் அவருக்கும் இருந்த பாசம். இப்போ அந்த குரல் இனிமேல் கேட்காது என்பதை தான் மனசு இன்னும் ஏற்க மறுக்கிறது என்று பார்த்திபன் கண் கலங்கினார்.

    Advertisement
    பாக்யராஜ் தகனத்திற்கு முன் பூர்ணிமா கேட்ட ஒரு கேள்வி..

    பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு பார்த்திபன் தொடர்ந்து வெளியிட்டு வரும் பதிவுகளும், பேட்டிகளும் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. "குருவை இழந்த சீடன் இவ்வளவு உடைந்து பேசுவது மனதை நொறுக்குகிறது", "பாக்யராஜ் மீது பார்த்திபனுக்கு இருந்த பாசம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது", "இப்படிப்பட்ட உறவுகள்தான் சினிமாவை குடும்பமாக வைத்திருக்கிறது" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Actor Parthiban : Director Parthiban has shared an emotional tribute to his mentor K. Bhagyaraj, explaining why the filmmaker's sudden death continues to be difficult for him to accept. In a recent interview, Parthiban said that although Bharathiraja's demise was heartbreaking, the veteran director had been battling serious health issues for some time, which mentally prepared those close to him for the inevitable.