நர்ஸ்களுக்கு கோவில் கட்டணும்.. ஏனென்றால், கையெடுத்து கும்பிட்டு உருகிய நடிகர் பொன்னம்பலம்

  • சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் என்றாலே நினைவுக்கு வரும் முகங்களில் நடிகர் பொன்னம்பலமும் ஒருவர். கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மிரட்டியவர். திரையில் அவரைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு ஒரு விதமான பயம் வரும். ஆனால் இப்போது அவர் ஒரு பேட்டியில் பேசிய விஷயத்தை பார்த்தால் அந்த மிரட்டலான நடிகருக்குள் இருக்கும் மனிதநேயம் தான் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    Advertisement

    நடிகர் பொன்னம்பலம் பேட்டி

    அதாவது சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, செவிலியர்கள் (நர்ஸ்) குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்றிருக்கிறது. அவர் பேசுகையில், 20 வயதில் இருக்கும் செவிலியர்களுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது தெரியுமா? அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும், நம்ம ஹாஸ்பிடல்ல முடியாம இருக்கும்போது நர்ஸ் நம்மளை கவனிக்கிறது இருக்கே அதை சொல்லவே முடியாது. குழந்தை ஆய் போயிட்டா நம்மளை துடைக்க சொன்னா நமக்கு மனசு வராது. ஆனால் நம்ம நாத்தத்தை பொறுத்துக்கிட்டு அவங்க நம்மள கவனிச்சக்கிறாங்க. உண்மையாக அவங்க தான் தேவதைகள். கடவுளால் அனுப்பப்பட்ட தேவதைகள் யாருன்னா நர்ஸ் தான் என்று பொன்னம்பலம் உருக்கமாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    உடல்நிலை பிரச்சனை

    அவர் இப்படி செவிலியர்களை பற்றி மனம் திறந்து பேசுவதற்கு பின்னால் அவருடைய சொந்த அனுபவங்களும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு சிறுநீரக பிரச்சனைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார். ஆப்ரேஷன், ட்ரீட்மென்ட் என அவர் பல சிரமங்களை சந்தித்திருக்கிறார். அந்த நேரத்தில் மருத்துவர்கள், நர்ஸ் என்று மருத்துவ பணியாளர்களின் உதவி அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில் உடல்நிலை குறைவுக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    Advertisement

    உதவி செய்த நடிகர்கள்

    பொன்னம்பலம் ஹாஸ்பிடலில் இருந்த சமயத்தில் நடிகர் தனுஷ், சிரஞ்சீவி, சரத்குமார் உள்ளிட்டோர் பணம் கொடுத்து உதவி இருந்தார்கள். அதே சமயத்தில் நான் பல வருடங்களாகவே என்னுடைய மனைவியை பிரிந்து தான் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்னை முழுமையாக கவனித்து வருவது செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தான். என்னால் முடிந்த வரைக்கும் என்னை கவனித்துக் கொள்கிறேன், சில விஷயங்கள் அடுத்தவர்களின் உதவியோடு தான் என்னால் செய்ய முடிகிறது நான் தனியாகத்தான் வசிக்கிறேன் என்று அந்த பேட்டியில் பொன்னம்பலம் அவர் பேசியிருந்தார்.

    பாராட்டும் ரசிகர்கள்

    திரையில் வில்லனாக நடித்ததால் பொன்னம்பலத்தை பார்க்கும் பலரும் அந்த கேரக்டராகவே அவரை பார்க்கிறார்கள். நாட்டாமை படத்தில் அவருடைய நடிப்பும், சண்டை காட்சிகளும் ரசிகர்கள் மனதில் இன்னும் நினைவில் இருக்கும். சமீபத்தில் கூட ஏஐ வீடியோக்களில் பொன்னம்பலத்தின் பழைய கேரக்டர்கள் போல இப்போது வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது. பொன்னம்பலத்தில் இன்னொரு முகத்தை பல ரசிகர்களுக்கு தெரிய வைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் சில வாரங்கள் இருந்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இப்போது நோயாளிகளின் வலியையும், அவர்களுடைய அன்றாட தேவைகளையும் பொறுமையாக கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள் பற்றி அவர் சொன்ன விதம் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.

    English Summary

    Actor Ponnambalam: In Tamil cinema, actor Ponnambalam is one of the faces that immediately comes to mind when one thinks of a 'villain.' He left a strong impression by playing both villainous and character roles alongside leading stars like Kamal Haasan, Rajinikanth, Vijayakanth, and Sarathkumar. Seeing him on screen was enough to strike fear into the hearts of the audience. However, a recent interview has brought to light the humanity that lies within this formidable actor—a side of him that has now captured the attention of many.