சென்னை: சில நட்புகள் ரத்த சொந்தத்தை தாண்டி நெருக்கமாக இருக்கும். அதேபோலத்தான் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் ஆர். சுந்தர்ராஜன் இருவருடைய நட்பும் சின்ன வயதில் இருந்தே தொடர்ந்து இருக்கிறது. இடையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் பாக்யராஜ் இறப்பதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருவரும் மீண்டும் சேர்ந்து இருக்கின்றனர். ஆனால் பாக்யராஜ் இறந்த பிறகு அவருடைய பேரன் செய்த செயல் தன்னை ரொம்பவும் வருத்தப்படையாக செய்ததாக சுந்தர்ராஜ் சொல்லி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாக்யராஜ், இயக்குனராகவும், நடிகராகவும், எழுத்தாளராகவும் தனக்கென ஒரு காலத்தை உருவாக்கியவர். ஆனால் அந்த பெரும் கலைஞரை இழந்ததை விட இன்று அவருடைய குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவம் பலரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது.
இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பேட்டி
இது குறித்து சமீபத்தில் சுந்தர்ராஜன் பேசும்போது பாக்யராஜ் பேரனை பற்றி பேசும்போதே அவருடைய குரல் உடைந்து போனது. அவர் பேசும்போது, பொதுவாக நான் எந்த இழப்புகளையும் நினைத்து ரொம்ப வருத்தப்பட மாட்டேன். ரொம்ப கஷ்டமான விஷயங்களையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கவும் மாட்டேன். எல்லாம் நடப்பது நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பேன்.
ஆனால் பாக்யராஜ் குடும்பத்தில் இப்போ நடந்து கொண்டிருக்கிற சம்பவத்தை பார்த்தால் எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதே மாதிரி தான் அந்த பையனுக்கும் தாத்தா தான் உலகம். அவர் இறந்த அன்னைக்கு தாத்தா எங்கே என்று வீடு முழுக்க தேடிட்டு இருந்தான். இதனால் உறவினர்கள் அவனை வேறுபக்கம் கூட்டிட்டு போயிட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் தான் நடந்தது இன்னும் கஷ்டம். நான் வீட்டுக்கு போகும்போதெல்லாம் பாக்யராஜ் பொண்ணு சில வீடியோக்களை காட்டுவாங்க. அந்த வீடியோல அந்த பையன் தாத்தா இறந்த பிறகு ரூமுக்குள் போய் கதவை பூட்டிட்டு தனியாக உட்கார்ந்து இருக்கிறான். சாமி ரூமுக்குள்ள கதவை பூட்டிட்டு உட்கார்ந்து ஏதேதோ பண்ணுறான். அதை எல்லாம் பார்த்தாலே பயமா இருக்குது என்று பாக்யராஜ் மகள் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. எப்படித்தான் அவங்க குடும்பத்தினர் இதிலிருந்து மீண்டு வர போறாங்கன்னு எனக்கு தெரியல என்று கண்கலங்க பேசியிருந்தார். பாக்யராஜ் மறைவுக்கு பிறகு மருமகள் உருக்கமான பதிவு.. சந்தோஷமான செய்தி இருக்கா? பிரபலம் இப்படி சொல்கிறாரே? பாக்யராஜ் பேரன்
தாத்தா பாசம்
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சுந்தர்ராஜன் அளித்த பேட்டியில் ஒன்னாம் வகுப்பில் சேர்ந்ததிலிருந்து நானும் பாக்யராஜும் சேர்ந்து படித்தோம். வாடா போடான்னு உரிமையாக பேசுற ஒரே நண்பன் பாக்யராஜ் தான் என்று பெருமையாக சொல்லி இருந்தார். அதேபோல இடையில் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் 70 வருட நண்பனை இழந்து விட்டேன் என்றும் உருக்கமாக பேசி இருக்கிறார்.