குஷ்புவுக்கு அந்த பிரச்சினைக்கு நான் தேவைப்பட்டேன்.. ஆனால்? இப்போ! மகள் கல்யாணத்துக்கு இதனால் தான் போகல- ராதாரவி


  • சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த திருமணத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் பல நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    ஆனால், அந்த திருமணத்தில் ஒரு முகம் மட்டும் ரசிகர்களுக்கு தெரியவில்லை. அது நடிகர் ராதாரவி. ராதிகாவின் சகோதரரான ராதாரவி ஏன் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. அதற்கான பதிலை அவர் தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    நடிகர் ராதாரவி பேட்டி

    அவர் பேசும்போது, "என்னை யாரும் அழைக்கவே இல்லை. அழைத்திருந்தால் நிச்சயமாக கோவாவுக்கு போயிருப்பேன். அழைப்பு வராததால் தான் நான் போகவில்லை" என்று நேரடியாக கூறியுள்ளார்.

    அதோடு, குஷ்புவுடனான பழைய நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். "குஷ்பு அரசியலில் இருந்தபோது தேர்தலில் போட்டியிட்டார். அப்போது என் வீட்டுக்கே சுந்தர்.சியுடன் வந்து ஆதரவு கேட்டார். நான் என் ஏரியாவில் இருந்தவர்களை எல்லாம் அழைத்து அவருக்காக பேசினேன். அதன்பிறகு சுந்தர்.சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். அதனால் மகள் கல்யாணத்திற்கு நிச்சயம் அழைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை" என்று மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.

    Advertisement

    குஷ்பூவுக்கு செய்த உதவி

    அதுமட்டுமல்ல, "ஒரு காலத்தில் நான் அவர்களுக்கு தேவைப்பட்டேன். இப்போது தேவையில்லாத ஆளாகிவிட்டேன் போல. என்னை விட சம்பந்தமே இல்லாத பலரை திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். அதையெல்லாம் நான் கவனிக்காமல் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

    இதோடு குஷ்புவுக்கு உதவிய இரண்டு சம்பவங்களையும் ராதாரவி நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஒகேனக்கல் அருகே நடந்த படப்பிடிப்பு முடிந்து அனைவரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடுமையான காற்று வீசியதால் குஷ்பு பயந்துவிட்டாராம். உடனே தனது காரில் அவரை ஏற்றி பாதுகாப்பாக தர்மபுரி வரை அழைத்துச் சென்றதாக ராதாரவி கூறியுள்ளார்.

    அதேபோல், 'பாண்டித்துரை' படப்பிடிப்பின்போது குஷ்பு திடீரென மயங்கி விழுந்தபோது, அருகில் இருந்தவர்கள் தயங்கிய நிலையில், அவரை தானே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    "அந்த சம்பவங்களை எல்லாம் அவர் மறந்துவிட்டார் போல. ஏன் அழைக்கவில்லை என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ரசிகர்கள் கருத்து

    சிலர், "திருமணம் என்பது குடும்ப நிகழ்ச்சி. யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்பது முழுக்க முழுக்க அந்த குடும்பத்தின் முடிவு. அதை வெளியில் இருந்து விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி வருகின்றனர்.

    ஆனால் இன்னும் சிலர், "இத்தனை வருட நட்பும், பழக்கமும் இருந்தும் ராதாரவிக்கு அழைப்பு செல்லாதது அவருக்கு வருத்தமாக இருந்திருக்கும். அவர் அந்த மனக்கசப்பைத்தான் வெளிப்படையாக சொல்கிறார்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement
    பாக்யராஜ்க்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு சென்ற குஷ்பூ.. சாந்தனு செய்த செயல்.. கலங்கிய சுந்தர் சி

    இதற்கிடையில், குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. த்ரிஷா, ராதிகா, சரத்குமார், சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், தமன்னா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரைக்கதை மன்னன் பாக்யராஜும் அந்த விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு, மணமக்களுடன் சிரித்துப் பேசி வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த திருமண விழாவில் அவர் எடுத்த கடைசி புகைப்படங்களும், வீடியோக்களும் பின்னர் ரசிகர்களை கண்கலங்க வைத்தன.

    Advertisement

    குஷ்பு மகள் கல்யாணத்தில் நெகிழ வைத்த நிமிடங்கள்...
    இப்போது, அவந்திகாவின் திருமணத்தைச் சுற்றி ராதாரவி கூறிய இந்த மனக்கசப்பு, சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. "நட்பு, அரசியல், சினிமா... காலம் மாறும்போது உறவுகளும் மாறிவிடுகிறதா?" என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    Radha Ravi: Actor Radha Ravi has revealed why he did not attend the wedding of Khushbu and Sundar C's daughter, Avantika, which recently took place in Goa. In a recent interview, he said he was never invited to the ceremony and insisted he would have attended if he had received an invitation