பரோட்டா சூரினு வந்த சத்தம்.. கடுப்பாகி மண்டாடி ஹீரோ சொன்ன வார்த்தை.. அலுத்து கொள்ளும் ரசிகர்கள்

  • சென்னை: மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசிக் கொண்டிருக்கும்போது பரோட்டா சூரி என்று வந்த சத்தத்தை கேட்டு அவர் கடுப்பாகி சொன்ன வார்த்தைதான் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சும்மாவே நெட்டிசன்கள் சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை பூதாகரமாக்கி விடுவார்கள். இப்போ சூரி எனக்கு பரோட்டா சூரி என்று பெயர் கிடையாது என்று கொடுத்த விளக்கத்தை வைத்து அவரை கலாய்த்து வருகிறார்கள்.

    Advertisement

    சில நடிகர்கள் தங்களுக்கு பிரபலம் கொடுத்த கேரக்டர் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னாடி வைத்துக் கொள்வார்கள். சிலரோ தங்களுக்கு அறிமுகம் கொடுத்த படங்களின் பெயரையே பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கு உதாரணமாக நிழல்கள் ரவி உட்பட பல பெயரை சொல்லலாம். ஆனால் இதுபோன்று வரும் அடைமொழிகள் பலருக்கு பிரபலமாக இருந்தாலும் சிலருக்கு அதுவே வருத்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் இப்போ சூரி விஷயத்தில் நடந்திருக்கிறது.

    Advertisement

    பரோட்டா சூரி கிடையாது

    அதாவது மதுரையில் சூரி செய்தியாளர்களிடம் சூரி பேசிக் கொண்டிருக்கும் போது, பரோட்டா சூரியிலிருந்து சூரியா ஆக உயர்ந்து இருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு சூரி, "பரோட்டா சூரி என்று ஒன்று கிடையவே செய்யாது. நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். நான் எந்த படத்தில் பரோட்டா சூரி என்று பயன்படுத்தியது கிடையாது. நகைச்சுவை நாயகனாக இருந்த என்னை திரைக்கதை நாயகனாக இந்த இடத்தில் அமர வைத்தது மக்கள்தான்" என்றார்.

    நடிகர் சூரி பேட்டி

    அவருடைய இந்த பேட்டி இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது. பரோட்டா சூரி என்று பெயரை கேட்டதும் சூரியின் முகம் கடுகடுத்து டக்கென பேசியதே சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். சூரிக்கு பிரபலம் கிடைத்தது வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்த பிறகு தான். அதற்கு முன்பு அவர் எத்தனையோ படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் தலைக்காட்டி இருக்கிறார். அதில் இவர் யார் என்றே பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த பரோட்டா காமெடி இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்துவிட்டது. இதை அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ஹிட் கொடுத்த மண்டாடி

    அப்படி இருக்கும்போது இப்போ தொடர்ந்து ஹீரோவாகி நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் வெற்றி கொடுப்பதால் தான் ஆரம்பமான முதல் பட பிரபலத்தை மறந்து விடுவதா? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள். சமீபத்தில் சூரி நடித்த மன்றாடி திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த திரைப்படம் 10 நாட்கள் கடந்து ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து தான் மதுரையில் தியேட்டரில் ரசிகர்களிடம் பேசிவிட்டு செய்தியாளர்களிடமும் பேசி இருந்தார்.

    அப்போது கூட படம் வெளியாகி எத்தனை நாட்கள் ஆகிறது? 9 நாளா? 10 நாளா? என்று குழப்பத்துடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இதை பிடித்துக் கொண்டார் நெட்டிசன்கள் ஒருவருக்கு வளர்ச்சி வந்துவிட்டால் இப்படி பேசுவது சரியில்லை என்று அவருக்கு பாடம் எடுக்க தொடங்கி விட்டார்கள். எப்படியும் அடுத்த பேட்டியில் இந்த பஞ்சாயத்துக்கு சூரி பதில் சொல்லிவிடுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    English Summary

    Actor Soori: A remark made by actor Soori during an event in Madurai—triggered by his annoyance at hearing someone call him "Parotta Soori"—has sparked a debate on social media. Netizens are known to blow even minor issues out of proportion; now, they are trolling him over his clarification that his name is not "Parotta Soori."