டெல்லி தடியடி சம்பவத்துக்கு கொதித்த நடிகர் டொவினோ தாமஸ்.. வெளியிட்ட பதிவு! பாராட்டும் ரசிகர்கள்

  • சென்னை: டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் தைரியமாக வெளியிட்ட பதிவை பலரும் பாராட்டி ஷேர் செய்து வருகின்றனர். பொதுவாக அரசியல் விவாகாரங்களில் அதிகம் கருத்து தெரிவிக்காத டோவினோ இந்த முறை மாணவர்கள் மீது நடவடிக்கை குறித்து ஆதங்கத்துடன் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

    Advertisement

    டெல்லி பிரச்சனை

    நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதாகவும் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாணவர் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டகார்னர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். அப்போது தடியடி நடத்தப்பட்டதாகவும், கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகர் டோமினோ தாமஸ் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

    நடிகர் டோவினோ தாமஸ் பதிவு

    அதில், சரி தவறு என்பது ஒவ்வொருவரின் பார்வையில் மாறலாம். ஆனால் அமைதியான போராட்டத்தை இப்படி கையாள்வது ஏற்க முடியாது. நாட்டின் எதிர்கால தலைமுறையினர் தங்களுடைய குரலை எழுப்பும்போது அதை அடக்குமுறையால் ஒடுக்கினால் அந்த நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

    Advertisement

    அதோடு, மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்களா? வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்களை இப்படி நடத்தும் அளவுக்கு என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் எந்த பகுதியிலும் நியாயமான காரணத்துக்காக அமைதியான முறையில் யார் போராடினாலும் அவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன்.

    ஜனநாயக உரிமை

    மாற்றுக் கருத்து சொல்லும் உரிமை ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல. அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். யாராவது என் தேசிய உணர்வை கேள்வி கேட்டால்..., என்னைப் பற்றி எனக்கு தான் நன்றாக தெரியும். என் அரசியல் என்பது மனிதாபிமானம். நான் அமைதியை மட்டுமே நம்புகிறேன்... ஜெய்ஹிந்த்! என்று அவர் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

    Advertisement

    இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பல தமிழ் நடிகர்கள் கூட இதுபோல தைரியமாக குரல் கொடுக்கவில்லை, ஆனால் மலையாள நடிகர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிட்டாரே என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எப்படி இருந்தாலும் டெல்லி போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் என் அரசியல் மனிதாபிமானம் என்று டொமினோ தாமஸ் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

    டோமினோ தாமஸ் பயோகிராபி

    டோவினோ தாமஸ் யார் என்றால்,மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பிரபலம் கொடுத்தது மின்னல் முரளி என்ற திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இந்திய அளவில் பிரபலமானார். அதற்கு முன்பு மாயாதி, கோதா, என்று பின் மொய்தின், 2018 உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் மின்னல் முரளி படத்திற்கு பிறகு அதிகமான இளம் ரசிகர்கள் அவருடைய அவரை பாலோ பண்ண தொடங்கிவிட்டனர்.

    Advertisement

    மலையாள படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் நன்கு பரீட்சையமானவர்தான். அதுபோல தமிழிலும் நரி வேட்டை, லூசிபர் உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

    English Summary

    Actor Tovino Thomas : While the protest held by the students in Delhi is being talked about across the country, the post released by Malayalam actor Tovino Thomas in support of it is being talked about a lot on social media. Many people are praising and sharing his bold post. Dovino, who usually does not comment much on political affairs, expressed his opinion with reservations about the action on students this time.