நடிகர் விமலுக்கு 1 வருஷம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. பின்னணி காரணம்!

  • சென்னை: நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட 4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் 1 வருஷம் சிறை தண்டனை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் வகையில் தண்டனையில் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மன்னர் வகையறா பட பிரச்சனை

    இந்த வழக்கு விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா திரைப்படத்தின் தயாரிப்பு காலத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனையை மையமாகக் கொண்டது. படத்தின் தயாரிப்புக்காக ஒரு பைனான்சியரிடம் இருந்து பெருமளவில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை திருப்பி செலுத்துவதற்காக 4.5 கோடி மதிப்புள்ளான செக்கை விமல் வழங்கியதாகவும், பின்னர் அந்த செக் வங்கியில் செலுத்தப்பட்ட போது போதுமான அளவு பேலன்ஸ் இல்லாத காரணத்தால் திரும்பி வந்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

    Advertisement

    நடிகர் விமல் மீது செக் மோசடி புகார்

    இதை அடுத்து சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பல வருஷங்களாக நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் விமல் குற்றவாளி என தீர்மானித்து ஓராண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது.

    நீதிமன்ற தீர்ப்பு

    மேலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இருப்பினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விமல் தரப்பிற்கு சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் சிறை தண்டனையில் அமலாக்கம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பு விமலுக்கு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    டெல்லி தடியடி சம்பவத்துக்கு கொதித்த நடிகர் டொவினோ தாமஸ்.. வெளியிட்ட பதிவு! பாராட்டும் ரசிகர்கள்
    மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை பொருத்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் சோசியல் மீடியா முழுக்க அதைப் பற்றி செய்திகள் பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் விமலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட செய்தியும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சோசியல் மீடியாவில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Actor Vimal: The Chennai Saidappet court has sentenced actor Vimal to 1 year imprisonment in the 4.5 crore check fraud case. At the same time, the execution of the sentence has been temporarily suspended to allow an appeal against the verdict.