சென்னை: நடிகை அம்பிகா, ராதா இந்த இரண்டு பெயர்களை சொன்னாலே 80ஸ்களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எத்தனை நினைவுகள் வரும். ஒரே காலத்தில் அக்கா, தங்கை இருவருமே தனித்தனியாக முன்னணி ஹீரோயின்களாக கலக்கினார்கள். ஆனால் இப்போது நடிகை ராதா அக்கா அம்பிகா மீது கொடுத்த புகார் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அம்பிகா, ராதா நடுவராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு நடந்த அவமானம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அம்பிகா பேட்டி
அதாவது அம்பிகா ஒரு பேட்டியில் பேசும்போது, நான் பழைய சினிமா காட்சிகளை இன்றைய தலைமுறையினர்கள் ரீ கிரியேட் செய்வதை ரசித்திருக்கிறேன். நாங்கள் நடித்த காட்சிகளை இன்றைய நடிகர்கள் அல்லது ரசிகர்கள் மீண்டும் உருவாக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதே விஷயம் எல்லை மீறும் போது மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு பழைய அழகான காட்சியை வைத்து செய்யப்பட்ட ஒரு ரியாக்ஷன் வீடியோவை பார்த்தபோது கூட நல்ல காட்சியை இப்படி போட்டு அசிங்கப்படுத்துகிறார்களே என்று எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறியிருந்தார். மேலும் எனது தங்கை நடுவராக இருந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் என்னை வைத்து காமெடி என்ற பெயரில் மிகவும் மோசமாக பேசினார்கள். அதை காமெடி என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அதை பார்க்கும்போது என்னால் ரசிக்க முடியவில்லை. மாறாக கோபமாகத்தான் இருந்தது என்று ஆதங்கத்துடன் அவர் பேசி இருந்தார். அப்போது ராதா விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் தான் நடுவராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் அம்பிகாவை கிண்டல் செய்வதுபோல ஏதோ டயலாக் பேசி இருக்கிறாரோ? அதனால் தான் இவங்க இப்படி கோபப்பட்டு இருக்கிறார்களா? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கும்போது இப்போது ராதா தனது அக்கா மற்றும் சகோதரர் மீது சொத்து வழக்கு தொடர்ந்து இருப்பதால் இது பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட ராதா, அம்பிகாவின் அம்மா இறந்த சமயத்தில் எல்லோரும் ஒன்றாக தான் இருந்தார்கள். ஆனால் இப்போது அவருடைய அம்மா இறந்த பிறகு தான் இவர்கள் குடும்பத்தில் இப்படி பெற்ற பிரச்சனை வந்திருக்கிறதா? அல்லது அதற்கு முன்பே இதே பிரச்சனை இருந்ததா? என்ற கேள்விகளும் இருக்கிறது. ஆனால் அம்பிகாவின் அம்மா இறப்பிற்கு பிறகும் ராதாவுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் அம்பிகா கலந்து கொண்டு இருந்தார். அப்போதெல்லாம் புகைப்படங்களில் இருவரும் மகிழ்ச்சியாக தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று ரசிகர்கள் கமெண்ட்களை குவிக்கிறார்கள்.ரீ கிரியேஷன் வீடியோ
நிகழ்ச்சியில் அவமானம்
அம்மாவின் இறப்பு