பணம் கொடுத்து நெகட்டிவ் பரப்புறாங்க..! இது திமிர் கிடையாது.. நடிகை அனுபமா ஆதங்கம்.. யாரை சொல்கிறார்?

  • சென்னை: ஒரு படம் ஹிட்டானால் பாராட்டுவதும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால் விமர்சிப்பதும் சினிமாவில் வழக்கமான விஷயம் தான். ஆனால் ஒரு படத்தை விமர்சிப்பதற்கும் வேண்டுமென்றே குறை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது, அதிலும் ஒருவரிடம் பணத்தை வாங்கிகொண்டு ஒரு படத்தைப் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? என்று நடிகை அனுபமா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    Advertisement

    மலையாளத்தில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் மேரி கேரக்டரில் நடித்த போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு டிராகன், பைசன் படத்தில் நடித்து பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

    Advertisement

    காதல் பிரச்சனை

    இந்த இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான கேரக்டரில் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்திலும், நடிப்பிலும் தன்னை வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவரை பற்றிய பேச்சு அதிகரித்தது. ஆனால் ஒரு நடிகை பிரபலமாகும் போது அவருடைய படங்கள் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகளும் சேர்ந்து வருவது வழக்கமாகி விடுகிறது. சமீபத்தில் தான் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, தன்னுடைய முன்னாள் காதலால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருந்தார். அது சோசியல் மீடியாவை அதிர வைத்துவிட்டது.

    Advertisement

    அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாமே துருவல் விக்ரம் பற்றியது தானா? என்ற விமர்சனமும் எழுந்தது. அதற்கு காரணம் பைசன் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசு கிசுத்து எழுந்தது தான். ஆனால் அதை இருவரும் மறுக்கவே இல்லை. தொடர்ந்து ஜோடியாகவே போஸ்ட் போட்டு கொண்டிருந்தார்கள். ஒருவர் போஸ்ட்க்கு மற்றொருவர் லைக் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக அனுபமா பதிவுக்கு துருவ் லைக் கொடுப்பதில்லை.

    அனுபமா பேட்டி

    இருவரும் அன்பாலோ செய்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் இருவருக்குள் தான் கருத்து வேறுபாடா? என்ற கேள்விகள் எழுந்தது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் அவர் விமர்சனங்கள் குறித்து இப்போது பேசிய பேட்டியும் கவனத்தை பெற்று இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால் அதை பற்றி விமர்சனங்கள் வருவது இயல்பானது தான். ஆனால் அதில் என்ன குறைகள் இருக்கிறது என்று விமர்சனங்கள் ஆரோக்கியமான முறையில் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு படத்தை பற்றி பணம் பெற்றுக்கொண்டு திட்டமிட்டு நெகட்டிவாக விமர்சிப்பவர்கள் கருத்துகளுக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும்?

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    சோசியல் மீடியாவில் வெளியாகும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. எல்லா விமர்சனங்களுக்கும் நான் பதில் சொல்லவில்லை என்பதற்காக அது திமிர் கிடையாது. மற்றவர்கள் அதை திமிரு என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் எதுக்கும் செய்ய முடியாது என்று அவர் பேசியிருக்கிறார். இதுதான் இப்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் அனுபமாவின் தைரியமான பேச்சை பாராட்டுகின்றனர். இன்னும் ஒரு சிலர் படம் நல்லா இல்லை அல்லது நடிப்பு நல்லா இல்லை என்றால் நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். அதற்காக உடனே அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்து செய்கிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது என்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். இதனாலயே அனுபமா மீண்டும் வைரலாகி வருகிறார்.

    English Summary

    actress Anupama: It is common in the film industry to praise a movie if it becomes a hit and to criticize it if it fails to achieve the expected success. However, there is a distinction between offering a critique and intentionally finding fault. Furthermore, why should I even respond to those who accept money from someone to post negative reviews about a film? asks actress Anupama.