சென்னை: ஒரு காலத்தில் ஜெமினி, அன்பே சிவம், வின்னர், வில்லன் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை கிரண். குறிப்பாக வின்னர், அன்பே சிவம் படத்தில் அவருடைய நடிப்பை இன்றும் ரசிகர்கள் நினைவு கூறுகிறார்கள். ஆனால் சினிமாவில் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் கடந்த சில வருடங்களாக கிரண் சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெற்று வருகிறார். கவர்ச்சியான போட்டோக்கள், வீடியோக்கள் என தொடர்ந்து பதிவிட்டு வரும் அவர் ஒரு பக்கம் ரசிகர்கள் ரசித்தாலும் இன்னொரு பக்கம் விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இது பற்றி அவரே ஒரு பேட்டியில் பேசி இருந்தார். இப்போது அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? என்று கேட்கும் அளவுக்கு ஒரு புதிய விஷயத்தை செய்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ள விளம்பர போஸ்டரில் "Kiran Rathod private world "என்ற பெயரில் VVIP membership ஒன்று அறிவித்திருக்கிறார். அதற்கான கட்டணம் என்ன தெரியுமா? ரூபாய் 99, 999 கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.
இந்த உறுப்பினர் திட்டத்தில் என்ன கிடைக்கும் என்று விளம்பரத்தில் சொல்லியிருப்பதும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. VVIP சமூகத்தில் சாட்டிங் செய்யலாம், வீடியோ கால் வாய்ப்பு கிடைக்கும், தனிப்பட்ட குழுவில் சேரலாம், கிரணின் பிரத்யோக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், சிறப்பு தகவல்கள் என பல சலுகைகள் அதில் சொல்லி இருக்கிறார். அதாவது வேற ஒன்னும் இல்லங்க அந்த குழுவில் சேர்ந்து விட்டால் வீடியோ காலில் என்னவெல்லாம் மெம்பர்ஸ் கேட்கிறார்களோ அதை எல்லாம் கிரண் செய்வாராம். இதுதான் இப்போ இணையத்தில் விவாதமாக இருக்கிறது. ஒரு நடிகையுடன் சாட்டிங் வீடியோ கால் செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவழித்தால் அவர் வீடியோ காலில் என்னவெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறாரே இது ஆன்லைன் விபச்சாரத்தை நோக்கி போகிறதா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்று பலர் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பிறகு சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகை கிரண் இதுபோல செய்வது பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே கிரண் ஒரு பேட்டியில், வின்னர் படத்தில் பிகினியில் நடித்த பிறகு வாய்ப்புகள் குறைந்துவிட்டது, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன், கடந்த காலத்தில் நான் சினிமாவில் இருந்து விலகியதற்கும் சில நல்ல படங்களை தவறவிட்டதும் என் சொந்த முடிவே காரணம் என்றும் சொல்லியிருந்தார். சினிமாவில் வாய்ப்பு எனக்கு இல்லாததால் நான் வாங்கி வைத்திருக்கும் கடனை எல்லாம் யார் கட்டுவார்கள்? அதனால் தான் நான் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான போட்டோக்கள் போஸ்ட் போடுறேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். இப்போது ஒரு படி மேலே போய் 1 லட்சம் ரூபாய்க்கு மெம்பர்ஷிப் விளம்பரத்தால் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார்.1 லட்சம் ரூபாய் மெம்பர்ஷிப்
ரசிகர்கள் கேள்வி
கிரண் பேட்டி