சென்னை : மலையாள சினிமா மிகவும் விரும்பக்கூடிய ஜோடிகளில் ஒன்று நஸ்ரியா நசீம்- பகத் பாஸில். இருவரும் ஒன்றாக சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே கவனத்தை ஈர்க்கும். ஆனால் இந்த முறையில் வெளியிட்டிருக்கும் ஒரு போட்டோ ரசிகர்கள் மத்தியில் வேறு மாதிரியான பேச்சை கிளப்பியுள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல இளம் சிவப்பு நிற புடவையில் நஸ்ரியாவும், அருகில் பகத் பாசிஸிலும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்ததோடு, பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் நஸ்ரியா கர்ப்பமாக இருக்கிறாரா? சீக்கிரம் குட் நியூஸ் வரப்போகிறதா? என்ற கேள்விகளை சோசியல் மீடியாவில் எழுப்பி வருகின்றனர். சில பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதையும் இதனுடன் இணைத்து ஏதாவது முக்கியமான அறிவிப்புக்கான வாழ்த்தா? என்றும் விவாதித்து வருகின்றனர். ஆனால் நஸ்ரியா அல்லது பகத் பாஸில் தரப்பில் கர்ப்பம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியாகவில்லை. எனவே சோசியல் மீடியாவில் இதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உண்மையில் இதுபோன்ற வதந்திகள் ஏற்கனவே நஸ்ரியாவை சுற்றி சில வருஷங்களுக்கு முன்பே பரவியது. அப்போது நான் இப்போதைக்கு கர்ப்பமாக இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை நானே மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன், தயவுசெய்து யூகங்களை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். அதனால் இப்போது ரசிகர்கள் முன்பு போலவே இதுவும் வதந்தியா? அல்லது சரியான நேரத்தில் ஏதாவது அறிவிப்பா? என்று காத்திருக்கின்றனர். புடவையில் இருக்கும் நஸ்ரியா வயிறு பெரிதாக இருப்பது போல இருப்பதால் ரசிகர்கள் இதைக் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே சமீபத்தில் தான் நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அதேபோல நஸ்ரியாகவும் விரைவில் அறிவிப்பாரா? என்று எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். நஸ்ரியா மற்றும் பகத் இருவரும் பெங்களூர் டேஸ் படத்தின் போது நட்பாகி பழகி பிறகு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது சினிமா பயணத்தில் தனித்தனியாக வெற்றியாக தொடர்ந்தனர். பகத் பாசில் இந்திய அளவில் சினிமாவில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் நஸ்ரியா கதாநாயகியாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுபோல மலையாளத்திலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்த முறை வெளியான புகைப்படம் தான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே சில வருஷங்களாக சோசியல் மீடியாவை விட்டும், சினிமாவை விட்டு விலகி இருக்கும் நஸ்ரியா இப்போ மீண்டும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட தொடங்கி இருப்பதால் இது கர்ப்பமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர். சரி எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக அதை நஸ்ரியா தெளிவுபடுத்தினால் நல்லது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். நஸ்ரியாவின் திருமணத்தின் போது பல விமர்சனங்கள் வந்தது. அப்போது பகத் பாஸில் தலைமுடி குறைவாக இருப்பதை பார்த்தது வயதான நபரை நஸ்ரியா கல்யாணம் பண்ணப் போகிறாரா? என்னதான் அழகாக இருந்தாலும் பணம் இருந்தால் அழகு தேவையே இல்லையே என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இருவரும் காதலித்து மனம் ஓத்த தம்பதியாக இத்தனை வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் அதனால் தான் சோசியல் மீடியாவை விட்டு நஸ்ரியா விலகுகிறார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இப்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.வைரலாகும் நஸ்ரியா போட்டோஸ்
நஸ்ரியாவின் ஆரம்ப காலம்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி