நடிகை பாவனி- அமீர் வீட்டில் விசேஷம்.. பல நாள் கனவு நிறைவேறியது.. சந்தோஷ அறிவிப்பு.. குவியும் வாழ்த்து

  • சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த ஒரு காதல் திருமண பந்தத்தில் முடித்து, இப்போது சொந்த வீட்டிலும் குடி பெயர்ந்திருக்கிறது. பிக் பாஸ் பிரபலங்களான அமீர் பாவனி ரெட்டி தம்பதி புதிதாக கட்டியுள்ள வீட்டில் கிரகப்பிரவேசம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    பிக் பாஸ் காதல்

    பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் காதலித்து இருக்கிறார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு நீ யாரோ நான் யாரோ என்று ஆளுக்கொரு திசையாக பிரிந்து விடுவார்கள். அதுபோலதான் பாவனி அமீர் இருவரும் காதலிக்க தொடங்கிய போது கூட பல விமர்சனங்கள் வந்தது. பாவனி சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே பிரபலமானவர்தான்.

    Advertisement

    சீரியலில் நடிப்பு

    சின்னத்தம்பி உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அமீர் வந்தார். வந்த முதல் நாளிலிருந்து பாவனியை சைட் அடிக்க தொடங்கிவிட்டார். அப்போது பாவனி அமீரை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு டைட்டிலும் வெற்றி பெற்றனர்.

    Advertisement

    பாவனி அமீர் காதல் கதை

    அப்போதுதான் பாவனி தான் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஏற்கனவே பாவனிக்கு தெலுங்கு நடிகர் ஒருவருடன் கல்யாணம் முடிந்து இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு பாவனியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் தான் பட்ட கஷ்டங்கள், அவமானம் போன்றவற்றைப் பற்றியும் பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

    பிக் பாஸ் ஆடிஷனில் கடுமையாக நடந்து கொண்ட காரணம் இதுதான்! ஓபனாக பேசிய ஆரி
    அதற்கு பிறகு பாவனி மற்றும் அமீர் இருவரும் சில வருடங்கள் லிவ் இல் இருந்து வந்தனர். அப்போது கூட இவர்கள் கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு இல்லை பிரிந்து போய்விடுவார்கள் என்றெல்லாம் சிலர் சொல்லி வந்தனர். ஆனால் அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இந்த ஜோடி திருமணமும் செய்து தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்து வருகின்றனர்.

    Advertisement

    குவியும் வாழ்த்து

    அதுபோல திருமணத்திற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் இருவரும் ஒன்றாகவே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதி புதிய வீடு ஒன்றைக் கட்டி இருக்கின்றனர். தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றோம் என்று கிரகப்பிரவேஷ புகைப்படங்களை பாவனி பகிர்ந்திருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

    English Summary

    Pavani Reddy: A romance that started on Bigg Boss ended in marriage and has now moved into their own house. Bigg Boss celebrities Amir Bhavani Reddy and his wife have entered the planet in their newly built house. Bhavani has shared the photos and videos on her Instagram page and many people from fans to small screen celebrities are congratulating the couple.