உடல் பாகங்கள் தெரிய.. கவர்ச்சி ரூட்டு! சூர்யா படத்தில் ஹோமிலியாக நடித்த பிராணிதாவா?

  • சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சின்ன கேரக்டரிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திப் போன சில ஹீரோயின்களை பார்த்தாலே இந்த நடிகை இன்னும் ஏன் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்று ரசிகர்கள் கேட்பார்கள். அந்த லிஸ்டில் இருந்தவர்தான் பிரணிதா சுபாஷ். குறிப்பாக சூர்யாவுடன் அவர் நடித்த மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை பார்த்தவர்களுக்கு பிரணிதாவின் முகம் இன்னும் நினைவில் இருக்கும்.

    Advertisement

    அந்த அளவுக்கு அழகாகவும் பக்கத்து வீட்டு பெண் மாதிரியான ஒரு க்யூட்டான தோற்றத்தில் இருந்த பிரணிதா இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் நின்று பார்க்கிறார்கள்.

    Advertisement

    நடிகை பிரணிதா போஸ்ட்

    இது நம்ம பிரணிதாவா என்று கேட்கும் அளவுக்கு அவருடைய தற்போதைய லுக்கை வைத்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அவர் பகிர்ந்துள்ள போட்டோக்களில் சிவப்பு நிற ஜாக்கெட் மற்றும் நீல நிற உடைகள் மிகவும் கிளாமரான தோற்றத்தில் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், கமெண்ட்களும் வந்திருக்கின்றன.

    நடிகை பிரணிதா போட்டோஸ்

    அதில் ஒரு பக்கம் ரொம்ப அழகாக இருக்கீங்க எப்பவும் போல ஸ்டன்னிங் என்று ரசிகர்கள் பாராட்ட, இன்னொரு பக்கம் பழைய பிரணிதாவை நினைவு படுத்தி சில கமெண்ட்கள் வந்திருக்கிறது. மாஸ் படத்தில் பார்த்த பிராணிதாவா இது அப்போ இருந்த லுக்கே வேற.. இப்ப அடையாளமே தெரியலையே என்று சிலர் புலம்புகிறார்கள். அதிலும் பிரணிதாவுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அம்மாவான பிறகு இப்படி ஒரு கிளாமர் போட்டோ சூட் தேவையா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில் இன்னும் சிலர் திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து விட்டால் நடிகை போட்டோ போடக்கூடாதா? என்று அந்த கமெண்ட் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இந்த போட்டோவை வைத்து பிராணித்தாவை கலாய்ப்பதை விட திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் எப்படி உடை அணிய வேண்டும்? எப்படி போட்டோ போட வேண்டும் என்று இன்னொருவர் தீர்மானிக்க வேண்டுமா என்ற விவாதம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

    ரசிகர்கள் ரியாக்ஷன்

    தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் பிரணிதாவை மறந்து இருக்க முடியாது. குறிப்பாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் அனுராதா கேரக்டரில் நடித்திருப்பார். 2015 இல் வெளியான அந்த படத்தில் சூர்யா நயந்தாரா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் பிரணிதாவுக்கு படத்தின் முக்கியமான பிளாஷ்பேக் பகுதிகளில் பெரிய கதை இருந்தது.

    Advertisement

    அந்த படத்தில் பிரணிதா சூர்யாவுடன் கல்யாண கோலத்தில் வரும் பாடல்கள் இப்போதும் பலருக்கு பேவரைட். யுவன் சங்கர் ராஜா இசையில் அந்த படத்தின் நான் அவள் இல்லை உள்ளிட்ட பாடல் இடம் பிடித்திருந்தன. அதனால் பிரணிதாவின் புதிய புகைப்படங்கள் வைரலாகும் போதெல்லாம் பழைய மாஸ் படத்தில் காட்சிகளை நினைவுபடுத்தி ரசிகர்கள் பேசுவது இயல்பாகவே இருக்கிறது.

    குடும்ப வாழ்க்கை

    பெங்களூரில் பிறந்த பிரணிதா மாடலிங் மூலம் கவனம் பெற்று 2010ல் கன்னட திரைப்படமான Porki மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பழமொழிகளில் நடித்து தமிழில் உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிறகு 2021 ஆம் ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் நீண்ட காலம் பழக்கம் இருந்த நிலையில் குடும்பத்தினரும் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணம் முடிந்து விட்டாலும் நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் தான் என்று அவ்வப்போது அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    English Summary

    Pranitha: There are certain heroines from the past who made a significant impact in Tamil cinema despite playing small roles; seeing them often makes fans wonder why they didn't act in more films. Pranitha Subhash is one such actress. In particular, those who watched the movie *Masss* (also known as *Masss Engira Masilamani*), starring Suriya, would still remember her face.