காதலில் துரோகம்.. மனதளவில் உடைந்து போனேன்.. 2020ல் நடந்ததை வெளிப்படையாக சொன்ன நடிகை ரெஜினா

  • சென்னை: காதல் தோல்வி என்றால் சிலருக்கு அது ஒரு சின்ன வருத்தமாக கடந்து போய்விடலாம், ஆனால் உண்மையாக நம்பிய ஒருவரால் ஏமாற்றப்படும் போது ஏற்படும் வலி அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடாது. அப்படி ஒரு கசப்பான காதல் அனுபவத்தை தான் நடிகர் ரெஜினா கசாண்ட்ரா இப்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2020 ஆம் ஆண்டிலேயே தனது காதல் பிரேக் அப் ஆனது பற்றியும் அந்த சம்பவத்தால் தான் மனதளவில் எந்த அளவுக்கு உடைந்து போனேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரெஜினா, கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதிலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அவருடைய நடிப்பு பலருக்கு பிடித்திருந்தது. அதற்கு பிறகு மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என பல படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

    மூக்குத்தி அம்மன் 2 பட நடிகை

    தற்போது கூட மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லியாக மிரட்டி இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ரெஜினாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார். 2022ஆம் ஆண்டு என்னுடைய காதல் பிரேக்கப் ஆனது. அந்த உறவில் நான் கடுமையாக ஏமாற்றப்பட்டேன். அதனால் மனதளவில் முற்றிலும் உடைந்து போனேன். அந்த அனுபவத்திலிருந்து மீண்டு வருவது எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

    வில் ஸ்மித் முதல் ரெஜினா வரை.. உலகில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் கிகி சேலஞ்ச்.. என்ன பாஸ் இது?

    சுய பரிசோதனை

    இனிமேல் கொஞ்ச காலத்துக்கு எந்த காதலும் வேண்டாம் என்று அப்போதே முடிவெடுத்து இருக்கிறேன், என்னுடைய நேரத்தையும் கவனத்தையும் மற்றவர்களுக்காக செலவிடாமல் எனக்காகவே செலவிட வேண்டும் என்று எண்ணமே எனக்கு அப்போது வந்தது. அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கும் தொடங்கியதால் என்னை புரிந்து கொள்ளவும் என் மீது அன்பு செலுத்தவும் எனக்கு நேரம் கிடைத்தது. இன்று நான் மனதளவில் தெளிவாக ஒரு இடத்துக்கு வந்திருப்பதற்கு அந்த சுய அன்பு தான் முக்கிய காரணம்.

    மனம் விட்டு பேசவும்

    பெண்கள் பலரும் ஏதோ ஒரு கட்டத்துல தவறான முறையில் தொடப்படுவது, பாலியல் அத்துமீறல்களை சந்திப்பது போன்ற கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற விஷயங்களை பற்றி வெளியில் பேசுவதற்கு தயங்க கூடாது. நெருக்கமான தோழிகளிடம் மனம் விட்டு பேசும்போது தான் தங்களுக்கு நடந்தது தனக்கு மட்டுமே நடந்த ஒரு சம்பவம் இல்லை என்பது பெண்களுக்கு புரிகிறது. காதலில் ஏமாற்றப்படுவது பல பெண்கள் சந்திக்கும் அனுபவமாக இருக்கிறது. அதனால் நமக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் நடக்கிறதா என்று நினைத்து மனதிற்குள் வேதனையை கூட்டி வைத்துக் கொள்ள வேண்டாம்.

    நயன்தாராவின் குறி ரெஜினா? சூப்பர் ஸ்டார் பட்டத்தை விசிறி எறிந்தாரே.. காரணமே விடாமுயற்சி போல: பிரபலம்

    பெண்ணுக்கு பெண் சப்போர்ட்

    பெண்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மற்றவர்களும் தனியாக இல்லை என்ற உணர்வு கிடைக்கும். அது போல வாழ்க்கையில் ஏதாவது ஒரு இழப்பு அல்லது வலியான சம்பவம் நடந்துவிட்டால் உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்று நம்மை நாமே கட்டாயப்படுத்திக் கொள்ளக்கூடாது. அழ தோன்றினாள் மனதார அழுங்கள். காலையில் இருந்து இரவு வரை அழ வேண்டும் என்றாலும் அழுங்கள் அதற்காக உங்களை நீங்களே குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு சம்பவம் நடந்த பிறகு நான் ஏன் இப்படி இருக்கிறேன்? நான் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்று நம்மையே சந்தேகபடுத்திக் கொள்ள வேண்டாம். அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கு தேவையான அன்பையும், அக்கறையும் முதலில் நமக்கு நாமே கொடுக்க வேண்டும் என்று ரெஜினா பேசியிருக்கிறார். இது நல்ல விஷயம் தான் என்று பலரும் பாராட்டிய வருகின்றனர்.

    English Summary

    Actress Regina Cassandra has now spoken openly about her romantic experience. She has discussed her breakup, which took place in 2020, and revealed just how emotionally shattered she was as a result of that experience.