சென்னை: நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை நாளில் தமிழகம் முழுவதும் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த விளக்கம்தான் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை நாட்களில் கொலைகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்று ராஜ்மோகன் பேசியதை கண்டித்து பிரபல நடிகை ரேகா சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ரேகா வீடியோ
தமிழகம் முழுவதும் தீபாவளி நாளில் 10க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதிலும் ரோட்டில் வெடி போடாதீங்க கொஞ்சம் தள்ளி போய் போடுங்க என்று சொன்ன காவலர் உட்பட பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரேகா வெளியிட்ட வீடியோவில், முந்தைய ஆட்சி சரியில்ல அப்போ கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், ஊழல்கள் நடக்கிறது என்று சொல்லி தான் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து விஜய் ஆட்சிக்கு வாக்கு அளித்தார்கள். அப்படி இருக்கும் போது, அமைச்சர் ராஜமோகன் பேசும் போது முந்தைய ஆட்சியில் கொலைகள் நடக்கவில்லையா? அசால்டாக திமிராக கேள்வி எழுப்புவது எந்த விதத்தில் நியாயம்?
இதற்கு முந்தைய ஆட்சி தீய சக்தி என்றெல்லாம் சொன்னீங்க ஆனா இப்ப நீங்க தூய சக்தி என்று சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கீங்க அப்படி இருக்கும்போது இதற்கு முன்பு இதுபல கொலை நடக்கலையா என்று அசால்டாக கேட்கிறீர்களே? நாங்க முந்தைய ஆட்சி மாதிரி இல்ல என்று நீங்கள் நிரூபிக்க ஒரு கொலை கூட நடக்கக்கூடாது. ஆனா இந்த ஆட்சியிலும் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போவது என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி இருக்க வேண்டிய பல வீடுகளில் தங்களுடைய பிள்ளைகளை இழந்து பெற்றோர் அமாவாசை நாளில் காக்கைக்கு சோறு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 25 முதல் 30 நாட்களாக காணாமல் போன குழந்தையை நினைத்து பெற்றோர் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் ராஜ்மோகன் கொலை சம்பவம் பற்றிய கேள்விக்கு கூலாக இதற்கு முன்பு நடக்கலையா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ராஜ் மோகன் மேடைகளில் அடுக்குமொழியில் சிறப்பாக பேசக்கூடியவர், மற்றவர்களின் கவிதைகள், கதைகள், கற்பனைகளை மனப்பாடம் செய்து பேசுவதில் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆட்சியில் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் போது மட்டும் ஏன் முரண்பாடாக பேசுகிறீர்கள்? உங்கள் பேச்சில் உண்மையும் நேர்மையும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரியார், அம்பேத்கரை பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு பதவி சுகத்தில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து பேசிய விஷயங்களை நினைத்துப் பாருங்கள் அதில் உண்மை இருக்கிறதா என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் பேசுவதை பார்க்கும்போது பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதற்கு தகுதியற்றவர்களாக இருக்கிறீர்கள். ஒருநாள் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டவார்கள் பதவி என்பது 5 வருடம் தான் அடுத்த 5 வருஷத்துக்கு பிறகு மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை நினைத்து பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். போன ஆட்சியில் நடக்கலையா? போன ஆட்சியில் 5 நடந்துச்சு, 10 நடந்துச்சுன்னு கணக்கு சொல்லிட்டு இருக்கீங்க. எப்படி குற்ற உணர்வு இல்லாமல் பேச முடிகிறது? நாங்கள் எல்லாவற்றையும் மாற்றம் செய்வோம் என்று நீங்கள் சொன்னதை நம்பி தான் மக்கள் ஓட்டுக்கு மேல் ஓட்டு போட்டு உங்களை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் நீங்கள் இன்னும் பழைய ஆட்சி மீது பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆண்மையைப் பற்றி அடுக்கு மொழியில் பேசுறீங்க, உங்க ஆண்மையை பற்றி எங்களுக்கு தெரியும் என்று ஆதங்கமாக அந்த வீடியோவில் நடிகை ரேகா பேசியிருக்கிறார்.தூய சக்தி ஆட்சி
'ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026'.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு அழைப்பு விடுத்த விந்து தாரா சிங்!
பேச்சில் உண்மைதன்மை
அனுபமாவுக்கு நடந்தது ரொம்ப கொடுமை.. தன் கையாலே எல்லாவற்றையும் இழந்து! நடிகை ரேகா நாயர் உருக்கம்
ஆண்மை பற்றி பேச்சு