சென்னை: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஷிவாங்கி தற்போது Netflix ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் "லாக் அப் 2" ரியாலிட்டி நிகழ்ச்சியில் பேசிய ஒரு சம்பவம் சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. நடிகையாக வேண்டும் என்ற தனது கனவை பயன்படுத்தி சின்ன வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் முயற்சி குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
திரைப்பட நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சீரியல் நடிகர்களுக்கும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை ஷிவாங்கி ஜோஷி. இவர் 'Yeh Rishta Kya Kehlata Hai' தொடரில் நைரா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'Balika Vadhu 2', 'Barsatein' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த அவர், தற்போது 'Lock Upp: Sach Ya Sazaa' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த லாக்கப் 2 நிகழ்ச்சியும் பிக் பாஸ் போல தான். எல்லா போட்டியாளர்களும் ஒரு வீட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த பல மறைக்கப்பட்ட சம்பவங்கள், கஷ்டங்களை ஒரு டாஸ்க்கில் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதில் தான் ஷிவாங்கி தன்னுடைய வாழ்க்கையில் தன்னை ரொம்ப பாதித்த விஷயத்தை சொல்லி இருந்தார். அவர் கூறியது அவரது வார்த்தைகளில் இருந்து இதோ..: என்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் நீ நடிகையாக வேண்டும் என்றால் கார் ஓட்ட கத்துக்கணும் என்று சொன்னார். பிறகு அவரே கார் ஓட்ட கத்து தரேன் என்று காரில் தனது மடியில் என்னை உட்கார வைத்தார். அப்போது எல்லை மீறி என்னுடைய அந்தரங்க உறுப்புகளை அவர் தொட முயன்றார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய அப்பா அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து சினிமாவில் நெருக்கமான பல காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும் என்று கூறி, அதை சொல்லி தருவதாக மீண்டும் தவறாக நடக்க முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர் என்னை கீழே தள்ளிவிட்டார். சரியாக அப்போது, வெளியே போயிருந்த என்னுடைய அப்பா, அம்மா வீட்டிற்குள் வந்து விட்டதால் தான் தப்பித்தேன். அவர் என்னுடன் நெருக்கமாக இருக்க முயன்றதை பார்த்த எனது பெற்றோர், அடித்து வெளியே துரத்தினார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பல மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவே பயந்தேன். ஸ்கூலுக்கு கூட போவதற்கு ரொம்ப பயப்பட்டேன். நான் இப்போ வேண்டுமென்றால் சீரியல்களில் நடித்து எல்லோருக்கும் பிரபலமாக இருக்கிறேன். நல்ல வசதியாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டனர். தன்னுடைய அப்பா பிசினஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அது பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்த சமயத்தில் உறவினர்கள் வாங்கி கொடுத்த ரொட்டி, வெண்ணையை சாப்பிட்டு பல நாட்கள் வாழ்ந்தோம். பிறகு என்னுடைய பெற்றோர் கேண்டினில் வேலை பார்த்தாங்க. அடுத்தவங்களோட துணியை தைத்து தான் எங்களுடைய குடும்பமே நடத்தினாங்க என்று அவர் பேசி இருந்தார். இதைத்தான் நெட்டிசன்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஷிவாங்கி பழைய பேட்டிகளில் பேசும்போது தன்னுடைய அப்பா ராணுவத்தில் வேலை செய்ததாக சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போ எப்படி சொல்கிறாரே? அப்போ இதுவெல்லாம் நிகழ்ச்சிக்காக சொல்வதா என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஷிவாங்கி குடும்பத்தினர் இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்லி இருக்கின்றனர். சிவாங்கி அப்பா முதலில் ராணுவத்தில் தான் வேலை பார்த்தார், பிறகு அவர் விருப்ப ஓய்வு வாங்கி வந்து தொழில் தொடங்கினார். அதில் தான் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் ரெண்டு விஷயமும் உண்மைதான். எதுவும் உண்மை தெரியாமல் பேச வேண்டாம். ஷிவாங்கி அந்த நிகழ்ச்சியில் சொன்ன விஷயம். இவ்வாறு அவரது உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.லாக்கப் 2 நிகழ்ச்சி
சினிமா வாய்ப்புக்காக ஏமாற்றம்
பாலியல் தொந்தரவு
ரசிகர்களின் சந்தேகம்
குடும்பத்தினரின் விளக்கம்