சென்னை: நடிகை சோனா மீண்டும் பரபரப்பின் மையமாக மாறியுள்ளார். ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் திரைப்படம் எடுக்க முயற்சி செய்து வரும் அவர், அதற்காக பல தடைகள், விமர்சனங்கள், மனவேதனைகள் எல்லாம் சந்தித்ததாக தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் "எவ்வளவு பிரச்சனை வந்தாலும் என் கதையை திரையில் கொண்டு வராமல் நான் விடமாட்டேன்" என்ற பிடிவாதத்தோடு தற்போது போராடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துரோகங்கள், சினிமாவில் சந்தித்த வேதனைகள், நம்பிக்கை வைத்தவர்களால் ஏற்பட்ட மனஉளைச்சல்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் சோனா கூறியதாவது, "என்னுடைய வாழ்க்கையில் நிறைய பேர் துரோகம் செய்திருக்காங்க. அந்த துரோகங்களை எல்லாம் நான் மூட்டை முட்டையாக சுமந்து கொண்டு இருக்கிறேன். நான் யாரிடமும் ரொம்ப சீக்கிரம் கனெக்ட் ஆகிடுவேன். ஆனால் முழுமையாக நம்ப மாட்டேன். எப்போதும் ஒரு சந்தேகம் மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஏன் அப்படி என்று எனக்கே தெரியாது. ஒருவேளை நான் வாழ்க்கையில் அவ்வளவு அடி வாங்கியதால இருக்கலாம்" என்று கூறியுள்ளார். மேலும், "என்னிடம் நல்லா பழகினா நானும் மனசார பழகுவேன். ஆனால் நான் உண்மையாக இருப்பேன். அடுத்தவர்களும் அப்படித்தான் இருப்பாங்க என்று நினைப்பேன். ஆனா ஒரு கட்டத்துக்கு பிறகு தான் நான் ஏமாந்துட்டேன் என்பது புரியும். அப்படி பல இடங்களில் நடந்திருக்கிறது" என்று உருக்கமாக பேசியுள்ளார். சினிமா வாழ்க்கை பற்றியும் அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். "ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தபோது இதுதான் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் பிறகு நடந்த சம்பவங்கள் என்னை ரொம்ப பாதிச்சது. ஒரு கட்டத்தில் இந்த சினிமாவே வேண்டாம் என்று ஓடிப்போயிட்டேன். பிறகு தான் இந்த சினிமா நமக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது. இதை விட்டு எதற்காக ஓடணும் என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதற்குப் பிறகுதான் மீண்டும் வந்தேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த பேட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம், அவர் கூறிய "சூப்பர் ஸ்டார் நடிகர்" குறித்த தகவல்தான். "ஒரு பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் என் வாழ்க்கையில் நிறைய துரோகம் செய்திருக்கிறார். அவருடைய பெயரை சொல்ல விருப்பமில்லை. அவர் ஏற்கனவே பெரிய பிரபலம்தான். நான் பெயர் சொல்லி அவருக்கு இன்னும் பிரபலம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவரால் நான் பட்ட கஷ்டங்களும், மனவேதனைகளும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது" என்று சோனா கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. சிலர் பல நடிகர்களின் பெயர்களை இணைத்து பேச தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு தரப்பு "பெயர் சொல்லாமல் இப்படிப் பேசுவது சரியல்ல" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பும் நடிகை சோனா பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் முன்பு கூறிய கருத்துகள் பெரிய விவாதமாக மாறியது. "வடிவேலுவுடன் குசேலன் படத்தில் நடித்தபோது எனக்கு மிகவும் மோசமான அனுபவம் கிடைத்தது. அதற்குப் பிறகு அவருடன் இனி எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்" என்று அவர் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, "அதற்குப் பிறகும் அவருடன் சேர்ந்து நடிக்க 10-க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் எல்லாவற்றையும் நான் மறுத்துவிட்டேன்" என்றும் சோனா தெரிவித்திருந்தார். அந்த பேட்டியும் அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு வகை ரோல்களில் நடித்த சோனா, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபிக்க முயன்றார். ஆனால் அவரது வாழ்க்கை பல சர்ச்சைகள், விமர்சனங்கள், தோல்விகள், மனவேதனைகள் என ஏற்றத் தாழ்வுகளால் நிரம்பியதாகவே இருந்து வருகிறது. தற்போது தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் எடுக்க முயற்சி செய்து வரும் சோனா, "என்னுடைய கதையை நான் சொல்லவில்லை என்றால் யாரும் உண்மையை சொல்ல மாட்டார்கள்" என்ற மனநிலையில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை அவர் தொடர்ந்து பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் என்றும் பேசப்படுகிறது. ஆனால் இப்போது அவர் குறிப்பிட்டுள்ள அந்த "சூப்பர் ஸ்டார் நடிகர்" யார்? உண்மையில் என்ன நடந்தது? ஏன் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை? என்ற கேள்விகள்தான் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.நடிகை சோனா பேட்டி
திரைக்கு பின்னால் நடக்கும் அவலம்.. விருப்பமே இல்லை என்றாலும்! ஓபனாக பேசிய நடிகை மும்தாஜ்
ஏமாற்றம்
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா
சூப்பர் ஸ்டார் நடிகர்
நடிகை சோனா சொன்ன குற்றச்சாட்டு
வடிவேலு உடன் நடிக்க மறுப்பு