சென்னை: நடிகை தமன்னா என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய டான்ஸும் நடிப்பும் தான். குறிப்பாக காவலா, ஆஜ் கி ராத் போன்ற பாடல்களில் அவருடைய டான்ஸ் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் ஒரு நடிகையின் நடிப்பையும் திறமையும் தாண்டி அவருடைய உடல் தோற்றத்தை பற்றிய சிலர் பேசும்போது அது எப்படிப்பட்ட விமர்சனங்களை உருவாக்கும் என்பதற்கு தமன்னா விவகாரமும் ஒரு உதாரணமாக மாறி இருக்கிறது.
கடந்த வருஷம் நடிகர் அனு கபூர் பேசிய ஓர் கருத்து சோசியல் மீடியாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது? இப்போது அந்த விவாகாரம் குறித்து நடிகை தமன்னாவே நேரடியாக பேசி இருக்கிறார். அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதாவது, "ஒரு பெண்ணாக விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது, அதனால் இது போன்ற விஷயங்களை புறம் தள்ளிவிட்டு என் நடிப்பு தொழிலில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என் வேலையை நேர்மையாகவும், சேவையாக செய்ய விரும்புகிறேன். அந்த நேர்மை என் நடிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது" என்று தமன்னா சொல்லி இருக்கிறார்.
இந்த சர்ச்சை தொடங்கியது 2025 ஆம் ஆண்டு. இயக்குனரும் நடிகருமான அனு கபூர் ஒரு யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தமன்னா நடித்திருந்த ஆஜ் கி ராக் பாடல் வீடியோ காட்டப்பட்டது. இது ஸ்திரீ 2 படத்தில் இடம்பெற்ற பாடல் அந்த பாடலை பற்றி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருக்கும்போது, எனக்குத் தமன்னாவை ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அனு கபூர், தமன்னாவின் டான்ஸை பற்றியோ அவருடைய நடிப்பை பற்றிய பேசுவதற்கு பதிலாக அவருடைய உடல் தோற்றத்தை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அதாவது தமன்னாவின் உடல் மற்றும் நிறத்தை பற்றி வர்ணனையாக அவர் பேசியிருக்கிறார். அதோடு முகம், உடல் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த பாடல் மூலம் குழந்தைகள் நன்றாக தூங்குகிறார்கள் என்பது போல கிண்டல் செய்திருக்கிறார். இந்த வீடியோ அந்த நேரத்தில் பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. ஒரு நடிகையின் திறமையை பற்றி பேசாமல் அவருடைய உடலை பற்றி டபுள் மீனிங் பேசுகிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். குறிப்பாக பெண் கலைஞர்களை அவர்களுடைய நடிப்பு, உழைப்பு, திறமை ஆகியவற்றை தாண்டி உடல் தோற்றத்தின் அடிப்படையில் பேசுவது சரியா என்ற விவாதமும் வந்தது. தொடர்ந்து விமர்சனம் வந்ததும் அனு கபூர் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் நான் சொன்ன வார்த்தைகளுக்கு வேறு நோக்கம் இல்லை, ஒரு கலைஞரின் தோற்றத்தை பாராட்டியதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இந்த கருத்தை இங்கிலீஷில் சொல்லி இருந்தால் எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்திருக்காது ஹிந்தியில் சொன்னதால்தான் பிரச்சனை பெரிதாகி விட்டது என்று சொல்லி இருந்தார். அதோடு தமன்னாவுக்கு என்னுடைய பேச்சால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று அனு கபூர் சொல்லி இருந்தார். ஆனால் இந்த விவாகரத்தில் தமன்னா அப்போது நேரடியாக பதில் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் இதற்கு பதிலடி கொடுப்பது போல பேசி இருக்கிறார். தமன்னா இப்போ இந்த விஷயத்தை பற்றி பேசியதும் பழைய விஷயங்கள் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.அனு கபூர் பேசியது
ரசிகர்கள் கருத்து
விமர்சனங்கள்
அஜித் பக்கா குடும்பஸ்தன்.. ஆனால் விஜய்... ஓபனாக போல்டாக பேசிய தமன்னா! குவியும் கமெண்ட்ஸ்
மீண்டும் விவாதம்