சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தாமரைச்செல்வி அமைச்சர் அருண்ராஜ் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதே தாமரை செல்விதான் தேர்தலின் போது அருண் ராஜ்க்கு ஆதரவாக வாக்கு கேட்டு வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார். ஆனால் இப்போது இதை ஆட்சியால் தான் கஷ்டப்படுவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருந்தார். இப்போது திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதே நேரத்தில் தன்னைப்போல் சில பெண்கள் உடன் சேர்ந்து திருமண மண்டபங்களில் எக்ஸ்போ நடத்தி வருகிறார். சமீபத்தில் இதுபோல எக்ஸ்போ கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தான் எக்ஸ்போ நடத்துவதற்கு கோர்ட்டில் அனுமதி வாங்கியும் நடத்த விடாமல் தடுத்து விட்டார்கள் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், வணக்கம் திருச்செங்கோடு மக்களே நான் உங்கள் ஊருக்கு வந்து எக்ஸ்போ நடத்த வேண்டும் என்று அறிவித்திருந்தேன். ஆனால் உங்கள் ஊரில் இருக்கும் பெரிய கடைக்காரர்கள் நான் அங்கே எக்ஸ்போ நடத்தக்கூடாது என்று தடுத்து விட்டார்கள். அதனால் உச்ச நீதிமன்றத்தில் கூட அதற்கு அனுமதி வாங்கிவிட்டேன். ஆனாலும் என்னை நடத்தக்கூடாது என்று சிலர் தடுத்தாங்க. நான் அருண்ராஜ் சாருக்கு தான் இந்த விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று எத்தனையோ முறை முயற்சி செய்தேன். 10 நாட்களாக அவர் பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தோம். அவருடைய பிஏ மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பேசி எப்படியாவது அவரை மீட் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அவர் என்னை சந்திக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார். அவருக்கு சில விஷயங்கள் மறந்து விட்டது என்று நினைக்கிறேன். நான் அவருக்காக ஓட்டு கேட்டு அலைந்தேன், தூங்கிக் கொண்டிருந்தவர்களை கூட எழுப்பி அருள்ராஜ் சார் ரொம்ப நல்லவரு.. அவருக்கு ஓட்டு போடுங்க அவர் நல்லது செய்வாரு என்று சொன்னேன். ஆனால் நீங்க என்னை சந்தித்து பேசக்கூட முடியாதுன்னு சொல்லி இருக்கீங்க. நான் என்ன சார் பண்ணுனேன்? நீங்க உங்க ஊர்க்காரங்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவீங்களா? நீங்க எங்களுக்கும் அமைச்சர் தானே சார். எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். அவருக்காக தான் நான் முதல் முறையாக எலக்ஷனில் வாக்கு கேட்டு போனேன். ஆனா இப்போ எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் எங்களை சந்திக்க கூட மாட்டேங்கிறீங்க. நான் இந்த எக்ஸ்போவை நடத்துறது எனக்காக மட்டும் அல்ல. என்னை போல எத்தனையோ பேரு கஷ்டப்படுறாங்க எல்லோருக்கும் ஒரு ஆதாயம் கிடைக்கும் என்று தான் நினைத்து தான் நடத்துறேன். அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கஷ்டப்படுற பெண்களுக்கு பணமே வாங்காமல் தான் இடம் கொடுத்திருந்தேன். ஆனால் நீங்கள் என்னை மட்டுமல்ல இந்த எக்ஸ்போவை நம்பி இருந்த அனைவரையுமே ஏமாற்றிவிட்டீர்கள். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தாமரை செல்வி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.தாமரை செல்வி வீடியோ
வாக்கு கேட்டவரின் நிலைமை
ஊர்க்காரர்களுக்கு மட்டும் சப்போர்ட்