சென்னை: சினிமாவில் ஹீரோயினி வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்று நினைப்பவர்கள் நிறைய பேர். ஆனால் அந்த வாய்ப்புக்கு பின்னால் சில பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நடிகை தாரணி தனது அனுபவத்தை நினைவு படுத்தி பேசி இருக்கிறார். அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தனக்கு வந்து அழுத்தத்தையும், அதை மறுத்த பிறகு நடந்த பழிவாங்கும் செயலையும் தாரணி ஓபனாக பேசி இருக்கிறார்.
நடிகை தாரணி பேட்டி
சினிமாவில் இப்படி ஒரு பிரச்சனை யாருக்கு தான் வராமல் இருந்திருக்கும் என்று தாரணி தனது பேச்சை ஆரம்பித்திருக்கிறார். ஒரு பெண்ணாக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இதுபோன்ற சூழ்நிலையை கடந்து வந்திருப்பார்கள். சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் நடந்திருக்கும். நான் சினிமாவுக்கு ஆரம்பத்தில் வந்த போது தங்கச்சி கேரக்டர்ல தான் நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் சில படங்களில் ஹீரோயினியாகவும் நடித்திருக்கிறேன். அந்த படங்களின் ப்ரடியூசர் யாரும் என்னிடம் எந்த மாதிரியான தொந்தரவும் கொடுக்கவில்லை. ஆனால் கேமரா மேன் என்னிடம் வந்து பேசினார். இதுவரைக்கும் தங்கச்சி கேரக்டர்ல நடிச்சிட்டு இருந்தீங்க இப்போ உங்களை நேரடியாக ஹீரோயினியா நடிக்க வைக்கிறோம். அதுக்கு எங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும் என்று நேரடியாகவே சொன்னார். அதற்கு நான், சார் என்னை பற்றி யாருகிட்ட வேணாலும் விசாரிச்சுக்கோங்க. நான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிஞ்சுக்கோங்க. நான் இப்படித்தான் சினிமாவில் அறிமுகமானேன் என்று யாராவது சொன்னால் அதுக்கு அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கிறேன். எனக்கு இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் ஹீரோயினியாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது என்ற முகத்துக்கு நேராக சொல்லிவிட்டேன். உடனே அவர் அப்படியா? என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி போய் விட்டார். அதோடு பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் சூட்டிங் சமயத்தில் வெயில் ரொம்ப அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் வேண்டுமென்றே வழக்கமாக பயன்படுத்தப்படும் வெளிச்சத்தை விட மிகவும் அதிகமான சூட்டை ஏற்படுத்தும் ஒரு லைட்டை என்னுடைய முகத்திற்கு நேராக திருப்பி விட்டார். என்னால் சூடு தாங்க முடியவில்லை. என் முகம் எல்லாம் எரிஞ்சு போற மாதிரி இருந்துச்சு. அதனால நான் அங்கேயே அழுதுட்டேன். அப்போ சுற்றி இருந்தவர்கள் அவர் தெரியாமல் செஞ்சி இருப்பார் என்று சொன்னாங்க. ஆனால் எனக்கு அவருடைய நோக்கம் புரிந்தது. அது தெரியாமல் நடந்த விஷயம் கிடையாது. நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததற்காக நடந்த பழிவாங்கல் என்று எனக்கு தெரிந்தது என்று தாரணி சொல்லி இருக்கிறார். தாரணியின் சினிமா பயணத்தை பார்த்தால் அவர் இந்த துறைக்கு திடீரென்று வந்தவர் கிடையாது. 15 வயதிலேயே கமல்ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதிலும் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவின் மனைவி மாலா கேரக்டரில் நடித்தது தாரணியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதது. வடிவேலு மாலா... மாலா... என்று இவரை சுற்றி வரும் காட்சிகளும், எரியுதடி மாலா என்று கதறி கூப்பிடு காமெடியும் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் நிற்கிறது.அட்ஜஸ்மென்ட் டார்ச்சர்
நேரடியாக மறுப்பு
பழிவாங்கல்
நடிகை தாரணியின் சினிமா பயணம்