விஜய் பற்றி திரிஷா ஓபனாக போட்ட போஸ்ட்.. இது என்ன புது கதையா இருக்கு? வியப்பில் ரசிகர்கள்

  • சென்னை: நடிகை திரிஷா மற்றும் விஜய் தொடர்பான செய்திகள், வதந்திகள் சோசியல் மீடியாவில் புதிதல்ல. இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்திருப்பதாலும் சமீப காலமாக சில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதாலும் இவர்கள் பெயரை இணைத்து பேசப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹாப்பி ரக்ஷா பந்தன் விஜய் என்று திரிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதிவிட்டது போல ஒரு ஸ்கிரீன்ஷாட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    அந்த பதிவில், விஜய் ரத்தத்தின் ரத்தமே என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடும் காட்சிகளும் இருக்கிறது. இதை பார்த்த சில விஜய் ரசிகர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து பேசி வருகின்றனர். இதுவரைக்கும் நீங்க திரிஷா விஜய் பற்றி என்னென்னவெல்லாம் பேசினீங்களே இப்போ பாருங்க திரிஷா விஜய் என்னுடைய சகோதரன் என்று போஸ்ட் போட்டுவிட்டார்.. இப்ப போதுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    திரிஷா இன்ஸ்டா போஸ்ட்

    உடனே நெட்டிசன்கள் இதன் உண்மையை பற்றி ஆராய தொடங்கிவிட்டனர். திரிஷா இன்ஸ்டா பக்கத்தை போய் பார்த்தால் அங்கு இதுபோன்று எந்த பதிவுகளுமே இல்லை. அதற்குப் பிறகுதான் இது எடிட்டட் போட்டோஸ் என்று தெரிய வருகிறது. இதை பார்த்ததும் உங்களுக்கு திரிஷா விஜய் இருவரும் அண்ணன் தங்கச்சி உறவாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்களும் அதை நம்பியாக வேண்டுமா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.

    திரிஷாவின் செயல்பாடுகள்

    ஏற்கனவே விஜய் பதவி ஏற்பு விழாவில் திரிஷா கலந்துகொண்டபோது பல விமர்சனங்கள் எழுந்தது. அப்போது கூட திரிஷா தன்னுடைய அண்ணன் வெற்றியை பார்த்து ரசிப்பதற்காக அங்கு போய் இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் திரிஷாவோ அல்லது விஜய்யோ, இருவருமே எந்த இடத்திலும் தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

    Advertisement

    இதனாலேயே சினிமா வட்டாரத்தை தாண்டி இப்போது திரிஷா விஜய் உறவு பற்றி அரசியலிலும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக இப்போதும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக தான் கலந்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட சுதந்திர தின விழாவில் திரிஷா விஜய் கொடியேற்றும் போது விஜயின் அப்பா அம்மா பக்கத்தில் உட்கார்ந்து ரசித்திருந்தார்.

    விஜய் மனைவி கொடுத்த வழக்கு

    சில மாதங்களுக்கு முன்பு விஜயின் மனைவி விவாகரத்து வழக்கு கொடுத்திருந்தார். அப்போது விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார், அந்த நடிகையுடன் பேசமாட்டேன் என்று பலமுறை எங்களிடம் சொல்லிவிட்டார் ஆனால் அந்த நடிகையுடன் வெளிநாடுகளில் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். அதை அந்த நடிகை சோஷியல் மீடியாவில் பதிவிடுவது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று சொல்லியிருந்தார். ஆனால் சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதா தான் கொடுத்த விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கி விட்டார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்று தகவல்கள் பரவி வந்தன. அதனாலேயே சுதந்திர தின விழாவில் சங்கீதா கலந்து கொள்வார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் சங்கீதாவோ அவருடைய குழந்தைகளோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மாறாக திரிஷா தான் கலந்து கொண்டு இருந்தார்.

    திரிஷா துணை முதல்வராக கூடாதா? ஜெயலலிதாவை ஒப்பிட்டு சொன்ன வார்த்தையால் புதிய சர்ச்சை!
    அப்போது கூட பல விமர்சனங்கள் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் விஜய்யும் திரிஷாவும் பல வருடங்களாக சினிமாவில் ஒன்றாக நடிக்கிறார்கள், அதனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி வந்தனர். இப்போது ஒரு படி மேலே சென்று திரிஷா விஜய்க்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து சொன்னது போல ஒரு போஸ்டையும் உருவாக்கி விட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    English Summary

    actress Trisha: News and rumors linking actress Trisha and Vijay are nothing new on social media. Speculation about a connection between the two persists because they have starred together in several films and have recently attended public events together. Amidst this, a screenshot—purportedly from Trisha's Instagram account wishing Vijay a "Happy Raksha Bandhan"—is currently going viral on social media.