சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து சில நாட்கள் கடந்துவிட்டாலும், அவரை நினைத்து உருகும் குரல்கள் இன்னும் ஓயவில்லை. அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில், பாக்யராஜ் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நடிகை ஊர்வசி பேசியிருக்கும் வார்த்தைகள் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
நடிகை ஊர்வசி பேட்டி
சமீபத்திய பேட்டியில் பேசிய ஊர்வசி, பாக்யராஜின் இறுதிச் சடங்கில் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை என்பதையும், அதற்கான வருத்தத்தையும் மறைக்காமல் சொல்கிறார்.
"பாக்யராஜ் சார் இல்லைன்னு தகவல் வந்தபோது ஷூட்டிங்கில் இருந்தேன். அதனால இந்த விஷயம் எனக்கு உடனே தெரியல. தெரிஞ்சதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. மறுநாள் காலையிலேயே போய் அவரை பார்த்துடணும்னு முடிவு பண்ணிட்டேன்". அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்ப தயாராக இருந்தபோது, "சீக்கிரமா அடக்கம் நடந்துடும்... முடிஞ்ச அளவுக்கு வேகமா வாங்க" என்று ராதிகா மேடம் போனில் சொன்னாங்க. அதைக் கேட்டதும் அவசரமாக புறப்பட்டேன்.
ஆனால் நான் பாதி வழியில போயிட்டு இருந்தப்போ, அடக்கம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த நிமிஷம் என்னால அதை ஏத்துக்கவே முடியல. காரை திருப்பிட்டு வீட்டுக்கே வந்துட்டேன். அவரை கடைசியா கூட பார்க்க முடியலன்னு நினைச்சாலே இன்னும் மனசு வலிக்குது" என்று கண்கலங்க பேசுகிறார். அதன்பிறகு அவருடைய வீட்டில் பலரும் பாக்யராஜை பற்றி பேசுவதை பார்த்ததாகவும், ஆனால் தன்னால் அப்படி பேச முடியவில்லை என்றும் அவர் மனம் திறந்தார். "அவர் உயிரோட இருந்தப்போ எவ்வளவோ பேசிருக்கோம். சிரிச்சிருக்கோம். நினைவுகள் நிறைய இருக்கு. ஆனா அவர் இல்லன்னு தெரிஞ்ச உடனே, கேமரா முன்னாடி நின்னு அவரைப் பற்றி பேசணும்னு சொன்னா என்னால முடியாது. அந்த வேதனையில வார்த்தையே வராது" என்று அவர் சொன்னது பலரையும் நெகிழ வைத்துள்ளது. பாக்யராஜ் இதான் தமிழில் உன் ஊர்வசிக்கு ஒரு அடையாளத்தை வாங்கி கொடுத்ததவர். சினிமாவில் தனக்கான ஒரு முக்கியமான வாய்ப்பை கொடுத்த மனிதரை, கடைசி முறையாக கூட பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இன்னும் அவரை விட்டு போகவில்லை என்பது அந்த பேட்டியில் தெளிவாக தெரிகிறது. "இப்போ கூட யாராவது இது எல்லாம் கனவு... பாக்யராஜ் சார் திரும்ப வந்துட்டார்னு சொல்லிட மாட்டாங்களா என்ற எண்ணம் இன்னும் மனசுல இருக்கு. அவர் இல்லைன்னு ஏத்துக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று ஊர்வசி சொன்ன கடைசி வார்த்தைகள், பாக்யராஜின் பிரிவை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் திரையுலகின் மனநிலையையே பிரதிபலிப்பதாக ரசிகர்கள் உருக்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.பாதியில் வந்த தகவல்
பாக்யராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட அடுத்த நொடி... நடந்த சம்பவம்..! கண்கலங்க பேசிய நட்டி
ஊர்வசியின் குரு
பாக்யராஜ் இறப்புக்கு பிறகு அவர் பெயரில் வெளியான அறிக்கை.. பின்னணியில் இந்த நடிகர் தானா? ரசிகர்கள் கேள்வி இதுதான்