சென்னை: நடிகை வடிவுக்கரசி பல வருஷங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போது விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம் என்று சொன்ன காரணம் தான் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பேட்டியை முழுமையாக கவனிக்காத சிலர் வடிவுக்கரசியுடன் விஜய் மகனாக நடித்து இருக்கிறார். ஆனால் இந்த அம்மா இப்படி சொல்லிட்டாங்களே என்று நெகட்டிவ் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். ஆனால் அவர் சொன்ன காரணமே வேறு.
நடிகை வடிவுக்கரசி பேட்டி
அதாவது வடிவுக்கரசி ஒரு பேட்டியில் பேசும்போது, அவரிடம் விஜய் முதல்வரானது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய் என்னுடைய பையனாக நடித்தவர். எப்பொழுதுமே என்னுடைய பையன் தான். அவருடன் நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். "அம்மன் கோவில் எல்லாமே" என்ற பாட்டு கூட என்னை பார்த்து தான் அவர் பாடி இருக்காரு. அப்போ எல்லாம் எனக்கு அவருடைய வாய் அசைவது கூட தெரியாது. எனக்கே ஆச்சரியமா இருக்கும், அந்த அளவிற்கு அதிர்ந்து பேசாதவர்.
விஜய் நடந்து வரும் போது அவருடைய காலடி சத்தம் கூட கேட்காது. ஆனால் ஃபைட் சீன் வந்தால் இந்த பையனா இப்படி பண்ணுனது என்று நமக்கே சந்தேகம் வரும். அந்த அளவிற்கு பண்ணுவார். அவர் முதல்வராக ஜெயித்து விட்டார் என்றதும் எனக்கு வருத்தமாக இருந்தது. காரணம் அந்த பையன் இந்த வயசில் இவ்வளவு பெரிய சுமையை சுமக்கணுமா? என்பதுதான். ஒரு அம்மாவாக எனக்கு வருத்தம் தான். அவருடைய குடும்பத்துக்கு அவ்வளவு செல்லமாக இருந்தார். அவருக்குன்னு ரசிகர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஆனால் தேவை இல்லாமல் இந்த அரசியலில் வந்து அவர் இவ்வளவு அழுத்தங்களையும், கஷ்டங்களையும் பார்க்கணுமா? என்று எனக்கு தோன்றியது. சமீபத்தில் கூட அவருடைய நண்பர் ஸ்ரீநாத்தை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அவரிடம் நீங்க விஜய் கிட்ட சொல்லிருங்க, அவர் சிஎம் ஆனது எனக்கு வருத்தம்தான்.. இந்த வயதில் இவ்வளவு பொறுப்பு தூக்கி தலையில் சுமக்கணுமா என்பது எனக்கு கஷ்டமாய் இருக்கிறது என்பதை அவரிடம் சொல்லி அனுப்பினேன் என்று அந்த பேட்டியில் நடிகை வடிவுக்கரசி பேசி இருக்கிறார். வடிவுக்கரசி எப்போதுமே மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடுவார். அதுபோல அஜித் மற்றும் விஜயகாந்த் பற்றிய தகவல்களையும் அதே பெட்டியில் பேசி இருந்தார். விஜய் முதல்வரானது தனக்கு சந்தோஷமாக இருந்தாலும் பயமும், வருத்தமும் இருக்கிறது. அவருடைய வயதிற்கு இவ்வளவு பெரிய பொறுப்பு தேவையா என்பதுதான் என்று அவர் சொல்லியிருக்கிறார்.சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்
விஜய் சிஎம் வருத்தம்
வடிவுக்கரசி விளக்கம்