இப்படி பண்றது அநாகரீகம்.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம்.. நடிகை வனிதா ஆதங்கம்

  • சென்னை: முதல்வர் விஜய் லண்டனில் அஜித் கார் பந்தய நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போது அதே நிகழ்ச்சியில் திரிஷாவும் கலந்து கொண்டது பேசு பொருளாக மாறியது. இது பற்றி நடிகை வனிதா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    விஜய் அஜித் நட்பு

    கடந்த வாரம் நடிகர் அஜித் கலந்து கொண்ட கார் ரேஸ் நிகழ்ச்சியை முதல்வர் விஜய் துவக்கி வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. இத்தனை வருடங்களாக விஜய், அஜித் ரசிகர்கள் இருவரும் அணில், ஆமை என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டாலும் இப்போது அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடி வந்து கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய காட்சி பலருடைய பகையை மறக்க வைத்திருந்தது. சிலரை கலாய்க்கவும் வைத்திருந்தது.

    Advertisement

    விஜய், திரிஷா பற்றி வனிதா

    இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும் போது ஏற்கனவே உள்ள பட சூட்டிங் காக லண்டனில் இருக்கும் திரிஷா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே கூடாது என்று ஆரம்பத்திலிருந்து விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் கடைசியில் திரிஷாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடனே அது சோசியல் மீடியாவில் வைரலானது.

    அதிலும் ஒரு இடத்தில் விஜய் நின்று கொண்டிருக்கும்போது திடீரென அங்கு வந்த திரிஷா எட்டி பார்க்க விஜய் முகத்தை திருப்பி கொண்டு போவது போல ஒரு வீடியோ வைரல் ஆனது. அதை பார்த்ததும் பலர் ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இது குறித்து நடிகை வனிதா சமீபத்தில் பேசும்போது, இத்தனை வருஷம் நிறைய சிஎம் இருந்திருக்காங்க. அவங்களும் அவங்க குடும்பத்தோட எத்தனை நாட்டுக்கு போய் இருக்காங்க? அப்படி இருக்கும்போது யார் குடும்பம்? யார் குடும்பம் இல்லை நீங்களும் நானும் முடிவு பண்ண முடியாது. அது அவங்களோட தனிப்பட்ட விருப்பம். அப்படி இருக்கும் போது இல்லாததும் பொல்லாததும் எல்லாம் பேசி எதிர்க்கட்சி கேலி பண்றது நாகரிகம் இல்ல என்று விஜய்க்கு ஆதரவாக வனிதா பேசியிருக்கிறார்.

    Advertisement

    வனிதாவின் சப்போர்ட்

    ஆரம்பத்திலிருந்து விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது, அவர்கள் நண்பர்கள் என்று வனிதா பேசி வருகிறார். அதேபோல இப்போதும் அவர்களுக்கு தன்னுடைய சப்போர்ட்டை தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது விஜயை தாக்கி தான் என்ற விமர்சனத்திற்கும் வனிதா பதிலடி கொடுத்திருந்தார்.

    பிக் பாஸ் சர்ச்சை

    அதில், விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பேசியது அவருடைய கருத்தை பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தான் எனக்கு தோணுகிறது. அவர் அந்த நிகழ்ச்சியில் சம்பளம் வாங்குகிறார் என்றால் அங்கு என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர் பேச அந்த நிகழ்ச்சியை எப்படியாவது வைரலாக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி பேசியது இப்படி சர்ச்சையை கிளப்பி விட்டது என்று நினைக்கிறேன்.

    Advertisement

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை நிகழ்ச்சி தான். அது ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு விஷயம் சர்சையாகி கொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இப்போது கூட நடந்து இருக்கிறது என வனிதா விளக்கம் கொடுத்திருந்தார்.

    English Summary

    Actress Vanitha : The fact that Trisha attended the same event where Chief Minister Vijay inaugurated Ajith's car racing program became a topic of discussion. Actress Vanitha has shared her views on this matter, and the topic is gaining attention on social media.