விஜய் சேதுபதியின் லீடர்ஷிப் பற்றிய சர்ச்சை.. அவங்கதான் காரணம்! வனிதா ஓபன் பேச்சு

  • சென்னை: விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் இன்னும் விவாதத்தை தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆக போகிறது ஆனாலும் இதற்கு இன்னும் முற்றுப்புள்ளி வராமல் இருக்கிறது. இந்த சம்பவம் பற்றிய வனிதாவும் இப்போ ஓபனாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    வனிதா விஜயகுமார் பற்றி சொல்லவே வேண்டாம் மனதில் பட்டதே அப்படியே ஓப்பனாக பேசிவிடுவார். அப்படித்தான் இப்போது கூட விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப்பை பற்றி பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சையானது தான். ஒவ்வொரு சீசனிலும் ஒரு சர்ச்சை நடக்கும். சர்ச்சையான விஷயத்தை தானே எல்லோரும் நோட் பண்ணுறாங்க. அதற்காகவே அந்த நிகழ்ச்சியில் அதுபோல அமைந்து விடுகிறது.

    Advertisement

    வனிதா பேட்டி

    அதுதான் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியும் கூட. கமல் சார் பிக் பாஸ் மேடையில் அரசியல் பற்றி பேசி இருக்கிறார். அப்போது அது பெரிதாக எடுக்கப்படாத காரணம் அவர் அரசியல் பிரமுகர் என்பதால் அப்படியே அது கடந்து போய்விடும். ஆனால் விஜய் சேதுபதி இப்போ பேசியதுதான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரையும் குறை சொல்ல முடியாது அவர் அவருடைய வேலையை தான் பார்க்கிறார். அது கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.

    டிஆர்பிக்காக நடக்கும் செயல்

    விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்பளம் வாங்குகிறார். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவரும் செய்ய முடியும். இப்போ என்னிடம் கேள்வி கேட்கும் செய்தியாளர்கள் கூட அவர்கள் சேனல் டிஆர்பிக்காக தான் கேள்வி கேட்கிறார்கள். என்னிடம் எந்த உள்நோக்கத்துடன் அவர்கள் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த கேள்விகள் கேட்டால் இதை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற ஒரு விஷயம் வரும். அதேபோல விஜய் சேதுபதியும் பேசி இருக்கலாம். மத்தபடி அதில் வேறு அர்த்தம் இருந்தது போல எனக்கு தெரியவில்லை என்று வனிதா சொல்லி இருந்தார்.

    Advertisement

    விஜய் சேதுபதி பையனை பற்றிய ட்ரோல்

    அப்போது அவரிடம் சோசியல் மீடியாவில் சிலர் விஜய் சேதுபதியின் பையன் போட்டோ மற்றும் விஜய் மகன் போட்டோ இரண்டையும் வைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்‌. இதை பார்த்தீர்களா? இது பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்கப்பட்டது. அதற்கு வனிதா அப்படி கமெண்ட் போட்றவங்க அட்ரஸ் குடுங்க நான் அவங்க வீட்டுக்கே போய் வெளுத்து வாங்குகிறேன். தேவையில்லாத விஷயங்களை எல்லாம் கமெண்ட்ல போட்டு இப்படித்தான் ஒவ்வொருத்தங்களை இன்னொருத்தவங்க கூட கம்பேர் பண்ணி எதையாவது பேசிக்கிட்டு இருப்பாங்க என்று கூறியிருக்கிறார்.

    வனிதா பதிலடி

    உடனே இந்த வீடியோவுக்கு கீழே வனிதா அக்கா விருச்சுவல் வாரியர்ஸை வெளுத்து வாங்கிவிட்டார் என்று சொல்லி வருகின்றனர். காரணம் விஜய் ரசிகர்கள் தான் விஜய் சேதுபதியையும் அவரது பையனையும் ட்ரோல் செய்து வந்தனர். விஜய் சேதுபதி பையனின் பழைய பேட்டிகள் மற்றும் விஜய் மகன் ஜேசன் பேட்டிகளையும் இணைந்து மீம்ஸ்களும் போட்டு வந்தனர். இதனால் வனிதா பதிலடி கொடுத்தது விர்ச்சுவல் வாரியர்ஸ்க்கு தான் என்று சொல்லி வருகிறார்கள்.

    Advertisement

    தன்னை பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸுகளுக்கு நச்சுனு விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி.. இனி சர்ச்சை ஓவர்!
    இதை வைத்து இனி என்ன பஞ்சாயத்து வரப்போகிறது. விஜய்க்காக ஆரம்பத்தில் இருந்தே சப்போர்ட் செய்து வந்த வனிதா இப்போது விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி இருப்பதால் இதையும் விர்ச்சுவல் வாரியர்ஸ் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? என்ற கேள்விகளும் குவிகிறது.

    English Summary

    Vanitha Vijayakumar: Vijay Sethupathi's remarks about leadership on the *Bigg Boss* show continue to spark debate on social media. It has been nearly a week since the incident occurred, yet the matter remains unresolved. Vanitha has now also spoken openly about the incident.