திரிஷாக்காக என்னை அசிங்கப்படுத்திட்டீங்களே.. இனி என் சப்போர்ட் சீமானுக்கு தான்! நடிகை விஜயலட்சுமி ஆதங்கம்

  • சென்னை: நடிகை விஜயலட்சுமி என்றாலே தமிழ் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரத்தில் அடிக்கடி பேசப்படும் பெயராகவே இருந்து வருகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக அவர் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த நிலையில் இனி என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்று விஜயலட்சுமி பேசுவது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவை உண்மையில் விஜயலட்சுமி வெளியிட்டாரா? அல்லது பழைய வீடியோவை யாரேனும் மாற்றி எடிட் பண்ணி இருக்காங்களா? என்ற சந்தேகம் நீடிக்கிறது.

    Advertisement

    விஜய் ரசிகர்கள் மீது கோபம்

    அதில் விஜயலட்சுமி பேசுகையில், நான் இனி சீமானுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் எழுதி வச்சுக்கோங்க இந்த வீடியோவை நான் ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2026 இல் வெளியிடுகிறேன். வரும் இடைத்தேர்தலில் சீமான் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் அப்படி போட்டியிட்டால் நான் அவருக்கு சப்போர்ட் கொடுப்பேன்.

    சீமானுக்கு மாறிய சப்போர்ட்

    இனி என்னுடைய சப்போர்ட் அவருக்கு தான். உச்சநீதிமன்றத்தில் சொன்ன மாதிரியே அவரும் அவர் கட்சியினரும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் நான் இதுவரைக்கும் விஜய் அண்ணா என்று அவருக்காக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணாவுடைய ரசிகர்கள் நீங்கள் என்னையே அசிங்கப்படுத்திட்டீங்க.. திரிஷாவுக்காக என்னை இழுத்து கேவலப்படுத்துறீங்களா? இது என்ன வகையில் நியாயம்?

    Advertisement

    திடீர் மாற்றம்

    இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் சீமானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். அவர் ஜெயிக்கட்டும் அப்புறம் என்ன நடக்குதுன்னு பாத்துக்கலாம் என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியது போல இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலருக்கும் குழப்பத்தை கொடுத்திருக்கிறது. நேற்று வரைக்கும் விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி என்ன திடீர்னு சீமானுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ரசிகர்களுக்கு குழப்பம்

    இன்னும் ஒரு சிலர் இந்த வீடியோவை சரியாக பாருங்க இது விஜயலட்சுமி பேசியது இல்ல. யாரோ எடிட் பண்ணி அனுப்பி இருக்காங்க என்று சொல்லி வருகிறார்கள். இதனால் எது உண்மை எது பொய் என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. இது குறித்து விஜயலட்சுமி இனி விளக்கம் கொடுத்தால் தான் தெளிவாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    English Summary

    Vijayalakshmi: The name of actress Vijayalakshmi frequently comes up in political circles, extending beyond the realm of Tamil cinema. In particular, the various comments and allegations she made in the past regarding Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, sparked significant debate.