தைரியமா இரு விஜிமா”னு விஜய் அண்ணா சொன்னபோது.. நடிகை விஜயலட்சுமி உருக்கமான வீடியோ

  • சென்னை: நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஜனநாயகன் படத்தைப் பற்றியும், பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் போது நடந்த சம்பவத்தை பற்றியும் பேசி இருக்கிறார். இது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

    Advertisement

    நடிகை விஜயலட்சுமி

    ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமியை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. சமீப காலமாக அவர் சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பற்றி அவர் அடிக்கடி குற்றச்சாட்டுகள் சொல்லி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். ஆனால் இப்போது அவர் விஜயை பெருமையாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    பிரண்ட்ஸ் பட அனுபவம்

    ஏற்கனவே பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக தான் விஜயலட்சுமி நடித்திருந்தார். அதே அண்ணன் தங்கை உறவு தனக்கு நிஜத்திலும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கனவே ஒரு வீடியோவில் சொல்லி இருந்தார். விஜய் எலக்ஷனில் ஜெயித்தபோது, என்னுடைய அண்ணன் இந்த நாட்டிற்கு முதலமைச்சர் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷம் வாய்ப்பு கிடைத்தால் அண்ணனை போய் பார்க்கணும்.. நான் இப்போதைக்கு என்னுடைய அக்காவை கவனித்து வருவதால் எங்கேயும் போக முடியாமல் இருக்கிறது.

    விஜய்க்கு வாழ்த்து

    அதே நேரத்தில் அண்ணனை நேரில் பார்த்தால் அவருடைய கட்சியில் உறுப்பினராக மாறிவிடுவேன். அவர் இன்று இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்பும், அவருடைய உண்மையான கேரக்டரும் தான் என்று பெருமையாக பேசி இருந்தார். அந்த வீடியோக்களை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் செய்து வந்தனர்.

    Advertisement

    நடிகர் விஜயலட்சுமி வீடியோ

    இப்போது அவர் வெளியிட்ட வீடியோவில் பேசும்போது, நான் இப்போதுதான் விஜய் அண்ணா நடித்த ஜனநாயகன் படத்தை பார்த்தேன். படத்தில் அவருடைய நடிப்பு வழக்கம் போல சூப்பராகவே இருந்தது. அதில் அவர் சொன்ன கருத்துக்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதிலும் அவருடைய குழந்தையிடம் "தைரியமா இரு விஜிமா"னு அண்ணன் சொல்லுவாரு. அதை கேட்கும் போது எனக்கே அவர் சொன்னது போல இருந்தது.

    எனக்கு இருக்கிற பிரச்சனை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த நேரத்தில் அண்ணன் எனக்கு எங்கேயோ இருந்து ஆறுதல் சொன்னது போலவே அந்த காட்சி இருந்தது. அதுபோல அவர் பெண்களுக்கு சப்போர்ட் ஆகவும் அந்த படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்லாவே இருந்தது. அந்த படம் அவருடைய கடைசி படம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.

    Advertisement

    பிரண்ட்ஸ் படம் அனுபவம்

    அதோடு, பிரண்ட்ஸ் படத்தில் நாங்க ரெண்டு பேரும் நடிக்கும்போது அண்ணனை கூப்பிடுவதற்காக டைரக்டர் சொல்லி அனுப்பினால், என்னை கூப்பிட்டு விடுவார்கள். என்னை கூப்பிட சொன்னால் அண்ணனை போய் கூப்பிட்டு விடுவார்கள். விஜி என்ற பெயரை வைத்து அந்த சமயத்தில் நிறைய ஜாலியான சம்பவங்கள் நடந்தது என்று கூறியிருக்கிறார். இதை வழக்கம் போல சிலர் ட்ரோல் செய்தாலும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கி விட்டார்கள்.

    English Summary

    Actress Vijayalakshmi: A video recently released by actress Vijayalakshmi is going viral on the internet. In it, she speaks about the movie *Dhananjaynan* and an incident that occurred while she was acting alongside Vijay in the film *Friends*. This has been attracting a lot of attention.