சென்னை: நடிகை வினோதினி ஸ்பாவுக்கு மசாஜ்க்கு போனபோது தன்னுடைய தாலி செயின் பறிபோன சம்பவம் பற்றி உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஸ்பாவிற்கு போகும் பெண்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்து இருக்கிறார். அதாவது வினோதினி வெளியிட்ட வீடியோவில் பேசும்போது, நான் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு ஸ்பா போகலாம் என்று நினைத்து ஒரு ஸ்பாவுக்கு போனேன். அங்கு கழுத்துக்கு மசாஜ் பண்ண வேண்டும் என்பதற்காக என்னுடைய தாலி செயினை கலட்ட சொன்னார்கள். அதை ஒரு டப்பாவில் போட்டு வைக்க சொன்னார்கள். நானும் என்னுடைய தாலி செயினை கழட்டி அந்த டப்பாவில் போட்டுவிட்டேன்.
நடிகை வினோதினி வெளியிட்ட வீடியோ
அதற்கு அப்புறம் மசாஜ் எல்லாம் முடிந்தது. அப்போது நான் அரை தூக்கத்தில் இருந்தேன். இருக்கிற டென்ஷன் எல்லாம் குறைந்தது போல இருந்தது.. அந்த நேரத்தில் என்னுடைய கணவர் குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு என்று எனக்கு போன் வந்தது. உடனே விஷயத்தை கேட்டு மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிவிட்டேன். மாடியிலிருந்து கீழே வரும்போது அங்கே வேலை பார்க்கிற ஒரு பொண்ணு என்னுடைய செருப்பை ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்து கொடுத்தாங்க. அதை வாங்கி போட்டுக்கிட்டு நானும் அங்கிருந்து கிளம்பிட்டேன்.
மனதை பாதித்த விஷயம்.. தற்கொலை செய்ய போனேன்! நடிகை சொன்ன வார்த்தை.. நமீதா எமோஷனல்
அடுத்த நாள் நான் துக்க வீட்டுக்கு போயிட்டேன். அந்த நேரத்துல தாலி பறீறி நான் டோட்டலா மறந்துட்டேன். அடுத்த நாள் தான் தாலி செயின் காணாமல் போனது ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஸ்பாவுக்கு போன் பண்ணி விசாரித்தேன். ஆனால் அங்கிருந்து எனக்கு எந்த பதிலும் சரியாக கிடைக்கவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன். பிறகு ஸ்பா நிர்வாகத்திடம் இருந்து போன் செய்து, என் மீது தான் குற்றம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் தாலி செயினை கழட்டி வைத்ததை, எடுக்காமல் போனது தப்பு, அதை தேடி அடுத்த நாள் வராமல் போனது தப்பு, எங்கள் நிர்வாகத்தில் யாரும் திருட மாட்டார்கள் அவர்களை மீது நீங்கள் குறை சொல்லி இருப்பது தப்பு என்று என் மீது எல்லா தப்பையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோவை நான் போடுவதற்கு காரணம் விலை உயர்ந்த நகைகள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் ஸ்பாக்களுக்கு போகும்போது விலை உயர்ந்த நகைகளை யாரும் அணிந்து போக வேண்டாம் என்று அட்வைஸும் கொடுத்திருக்கிறார். அதுபோல வினோதினி 80ஸ் 90ஸ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கிய இவர் மணல் கயிறு, புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிறகு 1992 பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக கவனம் பெற்றார். அந்த படம் தேசிய விருது பெற்றதுடன் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. அதே காலகட்டத்தில் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக கன்னட சினிமாவில் ஸ்வேதா என்ற பெயரில் அறிமுகமானார். தமிழில் திரைப்படங்களுக்கு பிறகு சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதிலும் சித்தி, வாணி ராணி, அக்னி நட்சத்திரம், ரோஜா, அன்பே வா, கண்ணான கண்ணே, மாரி, சீதாராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கன்னட சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டு இருந்தார். பிறகு கடந்த 2025 ஆம் ஆண்டு தன்னுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி சீரியலில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் இப்போது அவர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வருகிறது.பெண்களுக்கு அட்வைஸ்
குழந்தை நட்சத்திரம்
நடிகை வினோதினி நடித்த சீரியல்கள்