சென்னை: தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ரஜினிகாந்த் முதல் விஜய், அஜித் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் தேவா. அவருடைய இசையில் உருவான பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் மறைந்தபோது, அவருடைய இசையில் பல படங்களில் நடித்த அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாததும், இசையமைப்பாளர் இளையராஜா நேரில் வராததும், இரங்கல் தெரிவிக்காததும் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தேவாவின் மறைவு குறித்தும் அஜித், இளையராஜா பற்றியும் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவாவின் குணம், அவருடைய வாழ்க்கை பயணம், அஜித் குறித்து எழுந்த விமர்சனங்கள் என பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தேவாவை பற்றிப் பேசிய தம்பி ராமையா, "இந்த நாட்டில் சரியான நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் தலையாய மனிதர் தேவா. அவர் அணிந்திருந்த உடை மட்டும் வெள்ளை இல்லை... அவருடைய குணமும் அப்படித்தான். பயங்கர ஹியூமர் சென்ஸ் இருப்பவர். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் முன்னேறுவது சாதாரணமான விஷயம் கிடையாது. எத்தனையோ பேர் மேலே வந்த பிறகு தங்களது குடும்பத்தை மறந்துவிடுகிறார்கள். தேவாவோ மேடை ஏறி, தனது தம்பிதான் காரணம் என்று சொன்னார். இப்படி எல்லாம் யார் சொல்வார்? எங்கே போனாலும் தனது வாழ்க்கை தொடங்கிய இடத்தை மறக்காதவர். சின்ன வலி கூட இல்லாமல் அவரை இறைவன் அழைத்துக்கொண்டார் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். தொடர்ந்து, தேவாவின் மறைவுக்கு பிறகு அஜித், இசையமைப்பாளர் இளையராஜா போன்றோர் நேரில் வராதது குறித்த கேள்விக்கு, சம்பந்தப்பட்டவங்க தேவாவின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கலாம். அது வெளியே தெரியாமல் கூட இருந்திருக்கலாம். வெளியே வந்து அவருடைய வருத்தங்களை தெரிவித்தால் தான் வருத்தம் என்று இல்லை. அவர்களுக்கு என்ன சூழ்நிலையோ? அது நமக்கு தெரியாது.. இப்போ கூட அஜித் வெளிநாட்டில் இருக்கிறார், அதனால் அவர் போனில் தேவா சார் குடும்பத்திடம் பேசி இருக்கலாம். அது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதனால் நாமாக எதையாவது பேச வேண்டாம் என்று பதிலளித்திருக்கிறார். அஜித் இதற்கு முன்பு கேப்டன் விஜயகாந்த், எஸ்பிபி பாலசுப்ரமணியன் உட்பட பலர் இறந்த சமயத்தில் கூட அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை, வீடியோக்களும் வெளியிடவில்லை. அந்த விஷயத்தையும் இப்போது தோண்டி எடுத்து பலர் விமர்சிக்க தொடங்கிவிட்டார். அஜித் அவருக்கு தேவை என்றால் மட்டும் கார் ரேஸ் பார்க்க வரும்படி வீடியோ வெளியிடுகிறார். ஆனால் இதுபோன்று அவருடைய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தவர்களுக்கு ஒரு இரங்கல் தெரிவிக்க அவருக்கு நேரமில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில், தமிழக அரசியல் குறித்தும் தம்பி ராமையா பேசியிருக்கிறார். விஜய் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகளைக் கையாளும் நுட்பத்தை அவர் கற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். "கலைஞர் கருணாநிதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர். ஜெயலலிதா ஒரு பெண்ணாக இலக்கணமாக இருந்தார். விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிடுகிறார்கள். காலம் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறது. ஒப்பிடுவது என்பது அன்பு கொண்டவர்களின் பார்வையாக இருக்கலாம். ஆனால் ஒப்பீட்டுக்கு தகுதியானவரா என்பதை காலம் கவனிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.நடிகர் தம்பி ராமையா பேட்டி
தேவாவின் நல்ல குணம்
தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கண் கலங்கி அழுத ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல்
அஜித் பற்றிய விமர்சனம்
அப்பாவுக்கு திடீரென படபடப்பு வந்தது! தேவாவுக்கு இன்று காலை என்ன நடந்தது? ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்!
அரசியல் பற்றிய கருத்து