இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன? தேசியக்கொடியோடு நின்ற அஜித், விஜய்.. ரசிகர்களின் கேள்வி

  • சென்னை : ஒரு காலத்தில் தல vs தளபதி என்றாலே சோசியல் மீடியாவே சூடாகிவிடும். யார் பெரியவர்? யாருக்கு அதிக ரசிகர்கள்? யார் படம் அதிக வசூல் செய்யும்? என்று இரண்டு தரப்பு ரசிகர்களும் முட்டி மோதிக்கொண்ட காலம் அது. ஆனால் இப்போது அதே ரசிகர்கள் நாம ஏன் அந்த தப்பை செஞ்சோம் என்று யோசித்து வருகிறார்கள்.

    Advertisement

    லண்டனில் நடந்த அஜித்தின் கார்பந்தைய நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு அஜித்தை நேரில் சந்தித்து கட்டி பிடித்தது ஏற்கனவே இணையத்தை கலக்கியது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து இந்திய தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் செம குஷி. ஆனால் இன்னும் சில ரசிகர்கள் எங்களை மட்டும் இத்தனை வருஷம் சண்டை போட விட்டீங்க? உங்க படங்களில் இருவரையும் மாறி மாறி தாக்குவது போல வசனம் வைத்து எங்களுக்குள் இருந்த உங்கள் மீதான பாசத்தை தூண்டி விட்டுட்டீங்களே? ஆனா இப்ப நீங்க 2 பேரும் இவ்வளவு ஒற்றுமையா இருக்கீங்களே? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    வைரலாகும் பாடல்

    அதோடு இன்னும் சில ரசிகர்களோ இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்ற பாட்டு கேட்கும் போது எல்லாம் நீங்க விஜய்க்காக இந்த பாட்டை வச்சிருக்கீங்க என்று நாங்கள் நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் இப்போ இப்படி பண்ணிட்டீங்களே என்று சிலர் புலம்பி வர, இதே பாட்டை வைத்து விஜய், அஜித் இருவரும் தேசிய கொடியை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் சில நெட்டிசன்கள் எடிட் செய்து அஜித் ரசிகர்களை இன்னும் புலம்ப வைத்து கொண்டிருக்கிறார்கள்.

    ரசிகர்களுக்குள் போட்டி

    இத்தனை வருடங்களாக ஒருவர் பேரில் ஒருவர் போட்டியாளர்களாக வைத்து ரசிகர்கள் கொண்டாடிய இரண்டு பேரும் இப்போது ஒரே போட்டோவில் இப்படி இருப்பது பலருக்கு ஒரு விதமான பழைய நினைவுகளை கிளப்பி உள்ளது. நீங்கள் நண்பர்களாகவே இருந்து விட்டீர்கள். ஆனால் எங்களை மட்டும் இத்தனை வருடம் எதிரிகளாக மாற்றி விட்டீர்களே என்பது மாதிரியான கமெண்ட்களும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சீரியஸ் ஆக வருத்தம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இதை ரசிகர்களை சிரித்துக்கொண்டு கலாய்க்கும் விதத்திலும் மாற்றி இருக்கிறார்கள்.

    Advertisement

    விஜய்யும், அஜித்தும் நண்பர்கள் என்பதை இப்போது புதிதாக கண்டுபிடித்தது போல எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே இருவரும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் கூட இருக்கிறது. சமீபத்தில் அஜித்தும் முதல்வர் விஜயின் விளையாட்டு மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிகளை வரவேற்று பேசியிருந்தார். ஆனால் ரசிகர்கள் மட்டும் அடித்துக் கொண்டால் அதற்கு அவர்கள் என்ன பண்ண முடியும் என்றும் சிலர் கேள்விகள் கேட்கிறார்கள்.

    ரசிகர்களின் மன போராட்டம்

    முதல் போஸ்டர், கட்டவுட், ட்ரெய்லர், பாடல் ஓபனிங் என்று எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. அதிலும் அணில், ஆமை என்று இரண்டு தரப்புக்கும் பெயர் வைத்து கலாய்த்து கொண்ட காலமும் இருந்தது. இப்போது பாருங்க அதே விஜய் அஜித்தை கண்டிபிடிக்கிறார். அதை விஜய் அஜித்தின் ரேஸை தொடங்கி வைக்கிறார். இருவரும் இந்திய கொடியை ஒன்றாக படித்து போட்டோ கொடுக்கிறார்கள். இதைத்தான் ரசிகர்களால் ஜீரணிக்க கொஞ்சம் நேரம் ஆகிறது.

    Advertisement

    லண்டனில் அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடி வந்து கட்டிப்பிடித்து அவருடைய தோளில் முத்தம் கொடுத்து பாலிய காலத்து நண்பனை பல வருஷம் கழித்து சந்திக்கும் போது இருக்கும் உணர்வு தான் தென்பட்டது. ஆனால் இது ஒரு சிலருக்கு சுகமாகவும், பலருக்கு சுமையாகவும் மாறிவிட்டது என்பதுதான் இப்போ சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.

    English Summary

    Ajith: There was a time when the mere mention of "Thala vs. Thalapathy" would set social media ablaze. It was an era where fans from both camps clashed over questions like: Who is the bigger star? Who has the larger fanbase? Whose movie will rake in the most box-office revenue? Now, however, those very same fans are reflecting on their past actions and wondering why they made that mistake.