தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்


  • சென்னை: நடிகர் அஜித் குமாரின் அப்மா மோகினி மணி காலமான செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அஜித்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது அஜித் குடும்பம் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    அஜித் குமாரின் தாயார் மோகினி மணி இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக சில உடல்நலக் குறைபாடுகளை சந்தித்து வந்த அவர், குடும்பத்தினரின் அன்பு மற்றும் கவனிப்பில் இருந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    Advertisement

    தாயாரின் மறைவால் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருக்கும் நிலையில், குடும்பம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில வார்த்தைகள் ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்துள்ளன.

    அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்

    அந்த அறிக்கையில், "எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவும் ஆக விளங்கிய மோகினி மணி இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மோகினி மணியின் இறுதிச்சடங்கு முற்றிலும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    2023ல் நடந்த சம்பவம்

    அஜித் குடும்பம் இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை பி.எஸ். மணி காலமானபோது, குடும்பம் மிகுந்த சோகத்தில் இருந்த நேரத்தில் சிலர் அனுமதியின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    அந்த சம்பவம் அஜித் குடும்பத்தினரை மிகவும் வருத்தமடையச் செய்ததாக கூறப்பட்டது. அப்போது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களுடைய சோகங்களை கூட வெளிப்படுத்த முடியாமல் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள். தயவுசெய்து எங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள். எங்களுடைய தந்தையின் இறுதிச்சடங்கில் எங்களது கடமையை செய்ய விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த அறிக்கை அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.

    Advertisement
    Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம்

    மீண்டும் அதே நிலை வேண்டாம்

    தற்போது தாயாரின் மறைவிலும் அதேபோன்ற சூழ்நிலை உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

    சமூக வலைதளங்களில் பலரும், "இந்த நேரத்தில் அஜித் குடும்பத்திற்கு அமைதியும் தனிமையும் கொடுக்க வேண்டும்" என்று பதிவிட்டு வருகின்றனர்.

    Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல்
    Advertisement

    குவியும் இரங்கல்கள்

    மோகினி மணியின் மறைவு செய்தி வெளியாகியதிலிருந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், மோகினி அம்மையாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.. தாயை இழந்து வாடும் நண்பர் அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருக்கிறார்.

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரது பதிவில், "அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுதவிர பல்வேறு தரப்பினரும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Ajith: The demise of Ajith Kumar’s mother, Mohini Mani, has left fans and well-wishers heartbroken. In an emotional statement, the family described her as the “heart and soul” of their home and confirmed that the final rites would be conducted as a private family affair. Reports suggest that this decision was influenced by incidents that occurred during the funeral of Ajith’s father, P.S. Mani, in 2023, when unauthorized photos and videos reportedly caused distress to the grieving family. To avoid a similar situation, the family has requested privacy during this difficult time. Meanwhile, condolences continue to pour in from political leaders, film personalities, and fans across the country. Messages from figures such as M. K. Stalin have also drawn attention, with many urging the public to respect the family’s need for peace and personal space as they mourn the loss of a beloved family member.