Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம்


  • சென்னை: நடிகர் அஜித் குமாரின் அம்மா (Ajith Mother Passes Away) மோகினி மணி காலமான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அஜித் தனது பெற்றோர்கள் குறித்து பேசிய பழைய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    குடும்பத்தை பற்றி பேசுவதில்லை

    பொதுவாக நடிகர்கள் பலர் தங்களது குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால் அஜித் அதற்கு முற்றிலும் நேர்மாறானவர். தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என குடும்பம் குறித்த எந்த விஷயத்தையும் பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.

    Advertisement

    அஜித் அம்மா மறைவு

    அதனால் தான் அவரது தாயார் மோகினி மணி மறைவு செய்தி வெளியானதும், ரசிகர்கள் அஜித்தின் குடும்பம் பற்றிய பழைய தகவல்களை தேடி படிக்க தொடங்கியுள்ளனர்.

    அஜித் பேட்டி

    அஜித் அளித்திருந்த ஒரு பழைய பேட்டியில், தந்தை சுப்ரமணியம் குறித்து பேசிய சில தகவல்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    அந்த பேட்டியில், "எங்க அப்பா ரொம்ப புத்திசாலி. பெரிய படிப்பு இல்ல, பெரிய டிகிரி இல்ல. ஆனா வாழ்க்கையை புரிஞ்சு நடந்துக்கிற விதம் வேற லெவல்" என்று அவர் கூறியிருந்தார். இதன் மூலம் குடும்பத்தில் தந்தை சுப்ரமணியம் எவ்வளவு முக்கியமான நபராக இருந்தார் என்பது தெரிய வருகிறது.

    Advertisement

    படிப்பை விட்ட அஜித்

    இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

    பத்தாம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடராமல் தனது விருப்பமான துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, எந்த பெற்றோருக்கும் வரக்கூடிய கவலை அஜித்தின் பெற்றோருக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மகனின் விருப்பத்தை தடுக்காமல், அவருக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்கவே அவர்கள் முயன்றனர்.

    மெக்கானிக் வேலை, ஆடை ஏற்றுமதி நிறுவனம், வியாபாரம், மாடலிங் என பல்வேறு துறைகளில் அஜித் பயணித்தபோதும் குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருந்தது.

    Advertisement

    நடிகராக மாறிய பிறகும் மாறாத பாசம்

    திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த பிறகும், பெற்றோர்கள் மீது அஜித் வைத்திருந்த பாசம் குறித்து பலரும் பேசியுள்ளனர்.

    குறிப்பாக, 'வலிமை' திரைப்படம் வெளியான சமயத்தில், அந்த படத்தை தனது பெற்றோருக்கு முதலில் காட்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் ரசிகர்களை நெகிழ வைத்தது.

    அஜித் பொதுவெளியில் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதவர் என்றாலும், அவரது செயல்களில் பெற்றோர்கள் மீதான அன்பு வெளிப்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ரசிகர்கள் தனக்கு அடிமையாக இருக்கக் கூடாது அவர்கள் அவர்களுடைய, குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும்.. நான் என்னுடைய குடும்பத்திற்காக வேலை பார்க்கிறேன் அதேபோல ரசிகர்களும் அவர்களுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.

    Advertisement
    அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம்

    பெற்றோரை இழந்த அஜித்

    கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்தின் அப்பா பி. சுப்ரமணியம் காலமானார். தற்போது அம்மா மோகினி மணியும் வயது மூப்பு காரணமாக 85 வயதில் காலமாகி இருக்கிறார். என்னதான் வயதாகி மறைந்தாலும் எல்லா பிள்ளைகளுக்கும் பெற்றோர்கள் தானே ரோல் மாடல் அவர்களுடைய இழப்பை தாண்டி இனி அஜித் மீண்டு வர வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றோரை இழந்துள்ள அஜித்தின் குடும்பத்திற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும், "திரையில் எப்போதும் தைரியமாக தோன்றும் அஜித்தும் ஒரு மகன் தான்", "இந்த இழப்பை தாங்கும் மன வலிமை அவருக்கு கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், அஜித் தனது பெற்றோர்கள் குறித்து பேசிய அரிய தகவல்கள் மற்றும் குடும்ப பின்னணி தொடர்பான பதிவுகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

    திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஹீரோவாக இருந்தாலும், வாழ்க்கையில் பெற்றோரின் அன்பில் வளர்ந்த ஒரு சாதாரண மகனாகவே அஜித் இருந்தார் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

    English Summary

    The passing of Ajith Kumar’s mother, Mohini Mani, has left fans and the film industry saddened. As tributes continue to pour in, several old interviews of Ajith speaking about his parents have gone viral on social media. Known for keeping his family life private, Ajith had often expressed immense respect and gratitude towards his parents. Having already lost his father P. Subramaniam in 2023, the actor has now suffered another personal loss within three years. Fans have been sharing emotional messages, recalling Ajith’s strong family values and the love he always had for his parents.