ஆதரவு கேட்ட அஜித்குமாருக்கு ரசிகர்கள் பதிலடி.. அவருடைய பழைய அட்வைஸையே திருப்பி கொடுக்கிறார்களே!

  • சென்னை: உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள்... நேரம் கிடைத்தால் என் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களிடம் சொன்ன அஜித்தே இப்போது தனது கார் ரேஸுக்கு ஆதரவு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர், "சாரி தல... குடும்பத்தைப் பார்க்க வேண்டியது இருக்கு" என்று அஜித்துக்கே அவரது பழைய வார்த்தைகளை திருப்பிக் கொடுத்து வருகின்றனர். இந்த மீம்ஸ்களும், பதிவுகளும் இப்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருக்கின்றன.

    Advertisement

    நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அணி அடுத்ததாக போர்ச்சுகலில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி அஜித் தனது ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

    Advertisement

    அஜித் குமார் வெளியிட்ட வீடியோ

    அந்த வீடியோவில் அஜித் சொல்வது ரொம்ப சிம்பிள்தான். "நான் அஜித்குமார். வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் நமது அணி பங்கேற்கிறது. நீங்கள் அனைவரும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்." என்று பேசியிருக்கிறார். அவருடைய இந்த வேண்டுகோள் வீடியோ வெளியானதும் அஜித் ரசிகர்கள் பலரும் அதை பகிர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர், இந்த வீடியோவை வைத்து அஜித்தையே கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் அஜித் பல வருடங்களாக தனது ரசிகர்களிடம் சொல்லி வந்த ஒரு விஷயம்தான்.

    Advertisement

    ரசிகர்கள் தன்னை சுற்றியே வாழ்க்கையை வைத்துக்கொள்ளக்கூடாது, முதலில் தங்களுடைய குடும்பத்தை கவனிக்க வேண்டும், படிப்பு மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அஜித் தொடர்ந்து அறிவுரை சொல்லி வந்திருக்கிறார். "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?" என்று கூட அவர் ரசிகர்களிடம் பேசியிருக்கிறார்.

    ரசிகர்கள் கமெண்ட்ஸ்

    அதனால் இப்போது அவரது ரேஸ் வீடியாவுக்கு கீழே சில ரசிகர்கள், சாரி தல... எங்களுக்கு வேலை இருக்கு, குடும்பத்தை பார்க்கணும் என்று அவரது பழைய அறிவுரையையே கிண்டலாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
    இன்னும் சிலர், "நீங்க வாழுங்க... நாங்க எப்போ வாழ்வது? எங்க வாழ்க்கையை நாங்க பார்க்கணும்" என்ற ரீதியில் மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கலாய்ப்புக்கு பின்னால் ஒரு பழைய அஜித்-ரசிகர் உறவும் இருக்கிறது.

    Advertisement

    ஏனென்றால் அஜித் மற்ற நடிகர்களைப் போல ரசிகர் மன்றத்தை பெரிதாக்குவதில் ஆர்வம் காட்டாமல், 2011-ம் ஆண்டிலேயே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர். அதன்பிறகும் "உங்கள் குடும்பத்தை பாருங்கள், உங்கள் வாழ்க்கையை பாருங்கள்" என்பதையே தொடர்ந்து சொல்லி வந்தார். இப்போது கதை கொஞ்சம் தலைகீழாகிவிட்டது.

    20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்

    அட்வைஸே பதிலாக போச்சு

    அஜித், எங்கள் அணிக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் வேண்டும் என்று கேட்கிறார். ரசிகர்களோ, "நீங்களேதானே குடும்பத்தைப் பார்க்க சொன்னீங்க?" என்று அதையே வைத்து அவரை கலாய்க்கிறார்கள். இதோடு இன்னொரு பழைய சம்பவத்தையும் சிலர் இப்போது மீண்டும் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் அங்கு சென்றிருந்தார். இருவரும் சந்தித்து கட்டிப்பிடித்த காட்சிகள் பெரிய அளவில் வைரலானது.

    Advertisement

    அதே நிகழ்ச்சியின் போது, அஜித்திடம் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தபோது ஒரு சில ரசிகர்கரிடம் அவர் எரிச்சலாக நடந்து கொண்ட வீடியோவும் பின்னர் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது போர்ச்சுகல் ரேஸுக்கு ஆதரவு கேட்டு அஜித் வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அந்த சம்பவத்தையும் சிலர் சேர்த்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

    English Summary

    Ajith Kumar: Ajith, who once told fans to prioritize their families and watch his movies only if they had spare time, has now released a video seeking support for his car racing. Seeing this, some fans are turning his own words back on him, saying, "Sorry, Thala... we have to attend to our families." These memes and posts are currently gaining traction on social media.