AK64-ல் ரசிகர்களுக்காக மட்டுமல்ல! அஜித் எடுத்த புதிய முடிவு என்ன? டேர் டெவில் படத்தில் இருக்கும் 7 விஷயம்

  • சென்னை: குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்குமார் முழு கவனத்தையும் சர்வதேச கார் பந்தயங்களிலேயே செலுத்தியதால் அவரது அடுத்த படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ரம்பா நாட்களாகவே இருந்தது. அந்த காத்திருப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. ஏகே 64 தொடர்பான அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அஜித் குமாரி 64 ஆவது படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அஜித்துக்குமார் தான் தயாரிக்கிறார். இதனால் அஜித்குமார் சொந்த தயாரிப்பில் நடிக்கிறார். சரி இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்று பார்க்கலாம்.

    Advertisement

    மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி

    குட் பேட் அட்லீ வெற்றிக்கு பிறகு அஜித் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது. சோசியல் மீடியாவில் இயக்குனர் மாற்றம் குறித்து பல வதந்திகள் பரவினாலும் அவை அனைத்தும் தவறானவை என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்குமாரின் 64வது படத்தை இயக்குகிறார் என்று சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

    ஃபேமிலி படம்

    இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது குட் பேட் அக்லி முழுக்க அஜித் ரசிகர்களுக்காக எடுத்த படம், ஆனால் ஏகே 64 அப்படி இருக்காது ஸ்ட்ராங்கான திரைக்கதை உடன் குடும்ப ரசிகர்களையும் கவரும் ஆக்சன் என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று கூறியிருந்தார். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

    Advertisement

    தயாரிப்பு

    படத்தின் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது அறிவிப்பு வெளியாகிவிட்டதால் இனி உடனே சூட்டிங் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

    நடிகர், நடிகைகள் சஸ்பென்ஸ்

    விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு போய் விட்டதால் பல நடிகர் நடிகைகள் அஜித்துடன் நடிக்க போட்டி போடுகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள்? யார் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள்? என்று எந்த உறுதியான தகவல்களையும் அறிவிக்கவில்லை.

    ரேசிங்கும், சினிமாவும் சமநிலை

    சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஜித் தனது ரேசிங் ஷெடுயூளுக்கு இடையே தனது 64வது படப்பிடிப்பையும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரேஸிங்கை கைவிடாமல் சினிமாவையும் தொடரும் அவரது முடிவு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. எது எப்படியோ எப்போ தல மீண்டும் நடிக்க வருவீங்க என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போ நிம்மதி கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

    ஒரு வருஷத்துக்கு மேலாக அஜித்தின் 64வது படம் குறித்து எந்த தகவலும் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அஜித் இனி சினிமாவுக்கு வருவாரா? அப்படியே வந்தால் இன்னும் எத்தனை வருடம் கழித்து வருவார்? என்று கூட பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். விஜயின் கடைசி படம் ஜனநாயகன் வெளியான போது கூட அஜித்தின் ரசிகர்கள் எங்க தல படம் எப்ப வரும் என்று காத்திருப்பதாகவும் போஸ்டர்கள் போட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்போது புதிய அப்டேட்டை கொண்டாடி வருகிறார்கள். குட் பேட் அக்லிக்கு பிறகு இன்னும் பெரிய ஆக்ஷன் விருந்து கொடுக்க அஜித் தயாராகி வருகிறார். சரி படம் எப்போதான் ரிலீஸ் ஆகும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

    English Summary

    Ajith Kumar: After Good Bad Ugly, Ajith Kumar's focus has been on international car racing, so the question of when his next film will start has been in the air for days. Ajith's manager Suresh Chandra has now put an end to that wait. While the official update regarding AK 64 has been released, new information has also been released about this film. Ajith Kumari's 64th film is titled Dare Devil. Ajithkumar's wife Shalini Ajithukumar is producing this film. Thus, Ajith Kumar is acting in his own production. Well let's see what is the highlight of this film