3 தேசிய விருதுகளை அள்ளிய அமரன்.. ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும் இல்லையா? ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி

  • சென்னை: 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக கொண்டாடும் படமாக அமரன் மாறி உள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்தடுத்து 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பட குழுவுக்கு பெருமையை கொடுத்து இருந்தாலும் அதே நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஏக்கத்தையும் வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. அது சாய் பல்லவிக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதுதான்.

    Advertisement

    மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கிய அமரன் திரைப்படம் போன வருஷம் வெளியாகி விமர்சகர்கள். மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு ஸ்ட்ராங்கான நடிப்பை இந்த படத்தில் காட்டி இருந்தார்.

    Advertisement

    அமரன் படத்தின் வெற்றி

    ராணுவ வீரரின் வாழ்க்கை, காதல், குடும்பம், தியாகம், தேசப்பற்று என அனைத்தையும் சமநிலையுடன் சொல்லிய இந்த படத்தில் இந்து ரெபேக்கா வர்கிஸ் கேரக்டரில் நடிகை சாய் பல்லவி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அவருடைய நடிப்புக்காகவே இந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று சொன்னவர்கள் ஏராளம்.

    அமரன் படத்திற்கு 3 தேசிய விருது

    ஆனால் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனர் விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த பின்னணி இசை விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும், சிறந்த எடிட்டிங் விருது ஆர் கலைவாணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்தில் மூன்று தேசிய விருது கிடைத்ததால் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்தன. அதே நேரத்தில் ரசிகர்கள் கவனித்தது சாய்பல்லவியின் பெயர் விருது பட்டியலில் இல்லாததை தான்.

    Advertisement

    அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்தது வெறும் கதாநாயகி கேரக்டர் இல்லை. கணவன் எல்லையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒவ்வொரு தருணத்திலும் வீட்டில் காத்திருக்கும் மனைவியின் மனநிலையை இயல்பாக காட்டி இருப்பார். அதிலும் குறிப்பாக முகுந்த் போர்க்களத்திற்கு மீண்டும் திரும்பி போகும் காட்சிகளில், போனில் காத்திருந்து பேசும் காட்சி, குழந்தையுடன் காத்திருக்கும் தருணங்கள், கடைசியில் வீர மரணம் செய்தியை ஏற்றுக்கொள்ளும் அந்த எமோஷனல் காட்சிகள் என பல இடங்களில் சாய்பல்லவி நடிப்பு ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

    சாய்பல்லவிக்கு விருது இல்லை

    படம் வெளியான போது பல விமர்சகர்களும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சாய்பல்லவி படத்தை தோளில் சுமந்திருக்கிறார் என்று பாராட்டினார். அதனால்தான் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட போது இந்த முறை சாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது உறுதி என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்து விட்டது.

    Advertisement

    வருத்தத்தில் ரசிகர்கள்

    சோசியல் மீடியாவில், 3 தேசிய விருதுகள் வாங்கிய படத்தில் நடித்த சாய் பல்லவி நடிப்பு மட்டும் எப்படி கவனிக்கப்படாமல் போனது? அமரன் படத்தில் அவர் அழுது காட்சிகளை பார்த்து நாமும் அழுதோமே... அந்த நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Sai Pallavi: ஏஐ போட்டோ இல்ல! இதுதான் உண்மை! நீச்சல் உடை சர்ச்சைக்கு சாய் பல்லவி கொடுத்த பதிலடி
    அதே நேரத்தில் அவர் விருது கிடைக்கவில்லை என்பதால் ஒரு நடிப்பின் தாக்கம் குறைந்து விடாது என்பதும் தற்போது ரசிகர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. அமரன் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த வெற்றி முழு பட குழுவிற்குமானது.. அதில் சாய்பல்லவியின் பங்களிப்பும் அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Amaran: After the announcement of the 72nd National Film Awards, Amaran has become the most celebrated film among Tamil cinema fans. The fact that this film won 3 national awards consecutively has given pride to the film team but at the same time it has created a nostalgia and sadness among the fans. That is why Sai Pallavi did not get the award.