சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகை ராதா தன்னுடைய சகோதரி மற்றும் சகோதரன் மீது செக் மோசடி புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று நடிகை அம்பிகா செய்தியாளர்களை சந்தித்து ராதா கொடுத்த புகாருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை, எனக்கு அவர் 97 கோடி ரூபாய் தர வேண்டும், அதற்காக நான் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறேன் என்பதற்காக தான் அவர் இப்போது என் மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார் என்ற கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்த நடிகை அம்பிகா, ராதா குடும்ப விஷயம் தான் இப்போ சோசியல் மீடியாவில் அதிகமான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு ராதா, அம்பிகா மீது புகார் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அம்பிகா ஒரு பேட்டியில் ராதா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
நடிகை அம்பிகா பேட்டி
அதில் அவர் பேசும்போது, எங்க வீட்டில் ரொம்பவும் ஜாக்கிரதை ஆகவும் யாரையும் நம்பாமல் இருக்கும் ஒரே நபர் ராதா தான். நான் அவருடைய மகள் கல்யாணத்தில் வேலைக்காரி மாதிரி அவ்வளவு வேலைகள் செய்தேன். நீங்கள் அவருடைய குடும்ப போட்டோவில் பார்த்தால் கூட தெரியும் எதிலும் நான் இருக்க மாட்டேன். ஏனென்றால் நான் அவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட நான் அவருடைய போனை எடுக்கவில்லை என்று சொல்கிறார். இது நம்புற மாதிரியா இருக்கு?
ஏஆர்எஸ் கார்டன் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். நான் தான் அதற்கு முழு முதலாக இருந்தது. அந்த கார்டனை தொடங்கி வைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் அய்யாவிடம் பேசும்போது கூட, அவரிடம் உங்கள் பெயர் அல்லது ஜானகி அம்மா பெயர் வைக்கிற மாதிரி சொல்லுங்க என்று சொன்னேன். அதற்கு அவர் எதற்காக எங்க பெயர் வைக்கணும்? உங்களுடைய பெயரையே வைக்கலாம் என்று அவர்தான் இந்த பெயரை செலட் பண்ணி தந்தார். நடிகை ராதா புகாருக்கு அம்பிகா பதிலடி.. ஏஆர்எஸ் கார்டன் நிலத்தை அபகரித்ததாக பரபர குற்றச்சாட்டு நாங்க சில ஷேர் பிரச்சனையை பற்றி பேசுவதற்காக அவர்களை முயற்சி செய்தோம். அவங்க ஒத்துழைக்காதால் கடந்த 2 மாதத்திற்கு முன்பே நாங்கள் கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்து இருக்கிறோம். அதற்காக விசாரணைக்கு பல சம்மன் அனுப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் எதற்குமே வரவில்லை. ராதாவுக்கு தங்கம் தான் மைனஸ். தங்கத்தை பார்த்தாலே ராதா மனம் மாறிவிடுவார் என்று அம்பிகாவும் பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்.ஏ ஆர் எஸ் கார்டன் பிரச்சனை
அதற்கு பிறகு எங்களுடைய கஷ்டப்பட்ட பணத்தில் தான் அந்த கார்டன் உருவாகி இருந்தது. ஆனால் சமீபத்தில் நான் அந்த கார்டனை போய் பார்க்கும்போது அந்தப் பெயரையே மாற்றி வைத்திருந்தார்கள். அதிலிருந்து தான் பிரச்சனை வந்தது. எனக்கு சில சொத்துகளுக்காக அவங்க 97 கோடி ரூபாய் தரணும். அந்த செக் மோசடியை மறைக்க தான் புகார் கொடுத்திருக்காங்க. நான் அவங்க போனை எடுக்கலைன்னு சொல்றாங்க, உண்மையில் அவங்க தான் எங்களுடைய போனை எடுக்கவே இல்ல.தங்கம் தான் மைனஸ்