சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு விஷயம் அரசியல் களத்தை விட சினிமா ரசிகர்களிடையே தான் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷயம் என்னவென்றால் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு பிரபல இயக்குனர் மற்றும் முதல்வர் விஜய் இருவருக்கும் இடையே நடந்ததாக ஒரு சம்பவத்தை பற்றி புஸ்ஸி ஆனந்த் சட்ட பேரவையில் சொன்னார். அவர் அந்த இயக்குனர் யார் என்று சொல்லவில்லை என்றாலும் நெட்டிசன்கள் அந்த இயக்குனர் யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.
அதாவது விஜயின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தொகுதியை கேட்டார். ஆனால் அந்த தொகுதியில் பல வருஷங்களாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர் ஒருவர் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு உங்களுக்கு அந்த தொகுதியை கொடுக்க முடியாது என்று விஜய் மறுத்துவிட்டார் என புஸ்ஸி ஆனந்த் சொன்னார்.
அதாவது நீங்கள் பெரிய இயக்குனராக இருக்கலாம். ஆனால் பல வருஷமாக கட்சிக்காக களத்தில் இருக்கும் ஆளை விட்டுட்டு சீட்டுக் கொடுக்க முடியாது என்று விஜய்யின் நிலைப்பாட்டை பற்றி புஸ்ஸி ஆனந்த் பெருமையாக பேசினார். இதை கேட்டதும் சட்டப்பேரவையில் இருந்தவர்களுக்கே அந்த இயக்குனர் யார் என்று ஆர்வம் வந்திருக்கும். ஆனால் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? புஸ்ஸி ஆனந்த் அந்த இயக்குனரின் பெயரை சொல்லவில்லை. அதே நேரத்தில் சட்டப்பேரவையில் நடந்த இன்னொரு சின்ன சம்பவம் தான் இப்போது அந்த பெயரை கண்டுபிடிக்க நெட்டிசன்களுக்கு க்ளூவாக மாறி இருக்கிறது. அமைச்சர் பேசி கொண்டு இருந்தபோது தவெக எம்எல்ஏவும் வேளாண்துறை அமைச்சருமான வினோத் தன் அருகில் இருந்த விக்னேஷை கை காட்டினார். தற்போது அமைச்சராக இருக்கும் விக்னேஷ் கிணத்துகடவு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தத் தொகுதி தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொகுதி என்பதால் கிணத்து கடவு தொகுதிக்கு தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் சீட்டு கேட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விஜய் லோகேஷ் கனகராஜ் வெற்றி கூட்டணி அனைவருக்குமே தெரிந்தது தான். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை ஹிட் கொடுத்தவர். அப்படிப்பட்டவருக்கே விஜய் சீட்டு கொடுக்க மறுத்துவிட்டார் என்று அவருடைய ரசிகர்கள் இப்போது கூறி வருகின்றனர்.புஸ்ஸி ஆனந்த் சொன்ன விஷயம்
கிடைத்த க்ளூ
இயக்குனரை கண்டுபிடித்த ரசிகர்கள்