திரிஷா போட்டோவில் சிக்கிய பொருள்.. முதல்வர் கையில் இருந்த கார்? ரசிகர்கள் சொல்வது வேற!

  • சென்னை: நடிகை திரிஷா சமீபத்தில் தனது பாட்டியின் 98வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோக்கள் ரசிகர்கள் கவனத்தை இருந்து நிலையில் இப்போது அதில் இருக்கும் ஒரு சின்ன பொருளை வைத்து சோசியல் மீடியாவில் மீண்டும் விஜய், திரிஷா சர்ச்சை பேசு பொருளாகி உள்ளது.

    Advertisement

    திரிஷா வெளியிட்ட புகைப்படத்தில் அவருக்கு பின்னால் இருக்கும் டேபிள் பகுதியில் ஒரு சின்ன ஊதா நிற பொருள் இருப்பது போல தெரிகிறது. அதை சில நெட்டிசன்கள் பெரிதாக்கி பார்த்து இது விஜய் சில நாட்களுக்கு முன்பு கையில் வைத்து விளையாடிய பொம்மை கார் மாதிரி இருக்கிறதே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    திரிஷாவின் போஸ்ட்

    அதோடு நிற்காமல் திரிஷா வீட்டில் இந்த பொருள் எப்படி வந்தது? இது மீண்டும் ஏதாவது சொல்லாமல் சொல்லும் விஷயமா? என்று வழக்கம் பல ஆளாளுக்கு தங்களுடைய யூகங்களை தீப்பொறி போல பறக்கவிட்டு வருகிறார்கள். ஆனால் விஜய் தரப்பில் ரசிகர்கள் இதற்கு முற்றிலும் வேறு ஒரு விளக்கம் சொல்கிறார்கள், அது பொம்மை கார் இல்லை மேக்கப் கிட் அல்லது மேக்கப் தொடர்பான பொருளாக இருக்கலாம்.. ஒரு போட்டோவில் தெரியும் சின்ன பொருளை வைத்து இப்படி எல்லாம் முடிவு செய்யக்கூடாது, நல்லா இருக்கிற குடும்பத்தில் கும்மி அடிக்காதீங்க போதும் என்று அட்வைஸ் செய்கிறார்கள்.

    Advertisement

    குழப்பம் ஏற்படுத்தும் போட்டோ

    உண்மையில் போட்டோவில் இருக்கும் பொருள் என்ன என்பது குறித்து திரிஷாவோ அல்லது விஜய் தரப்போ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் அது பொம்மை கார் என்றும் அல்லது வேறு பொருள் என்று உறுதியாக கூற முடியாது, பேக்ரவுண்டில் ஊதா நிறத்தில் சின்னதாக தெரியும் பொருளை சூம்பண்ணி இது பொம்மை கார் என்று சொல்லி வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று சிலர் சொல்லி வந்தாலும், வழக்கம் போல நெட்டிசன்கள் இந்த போட்டோவை வைத்து இப்போ ட்ரோல் செய்து வருகிறார்கள்.

    திரிஷா வெளியிட்ட போட்டோ

    ஏற்கனவே கடந்த மாதம் விஜய் பிறந்தநாளின் போது திரிஷா வெளியிட்ட போட்டோ கூட பெரிதாக பேசப்பட்டது அது ஏஐ போட்டோ என்று சிலர் சொல்லி வந்தனர். ஆனால் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தைரியமாக பகிர்ந்து இருப்பதால் ஏஐ போட்டோவாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நெட்டிசன்கள் சொல்லி வந்தனர். ஆனால் திரிஷா பகிர்ந்த போட்டோவில் விஜய் அணிந்திருந்த டிரஸ் டேபிளோடு ஒட்டி இருப்பதை பார்த்ததும் இது ஏஐ தாங்க என்று சிலர் அடித்துக் கூறி இருந்தனர்.

    Advertisement

    ரசிகர்கள் வேண்டுகோள்

    ஆனால் திரிஷா பகிர்ந்த போட்டோவில் கேக் பக்கத்தில் இருந்த செல்போன் தான் அடுத்த சில நாட்களிலேயே முதல்வர் விஜய் ஆய்வுப்பணியின் போது வீடியோ எடுத்தது போல் இருந்ததால் இது ஒரிஜினல் என்றும் சிலர் வாதிட்டனர். இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இப்போ மீண்டும் ஒரு சின்ன காரை வைத்து பஞ்சாயத்தை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே விஜயின் மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதை சமீபத்தில் தான் அந்த வழக்கை வாபஸ் வாங்கி இருக்கிறார். எதனால் நல்லா இருக்குற குடும்பத்தில் யாரும் குழப்பம் பண்ணாதீங்க என்று விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

    English Summary

    Actress Trisha recently shared photos on Instagram celebrating her grandmother's 98th birthday with her family. While those photos initially drew fans' attention, a small object visible in them has now sparked a fresh round of speculation and controversy on social media regarding Vijay and Trisha.