‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ சிவகார்த்திகேயன் பயன்படுத்திய வரி.. பின்னணி விஷயம்

  • சென்னை: ஒரு நடிகர் தனது ரசிகர்களுடன் இருக்கும் நெருக்கத்தை காட்டுவதற்கு ஒரு புகைப்படம் போதும்தான். ஆனால் அந்தப் புகைப்படத்துடன் அவர் தேர்ந்தெடுக்கும் ஒரு வாசகம் சில நேரங்களில் அதைவிட அதிகமாக பேச ஆரம்பித்துவிடும். இப்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கும் ரசிகர்கள் சந்திப்பு வீடியோவில் அப்படியொரு விஷயம்தான் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்த நிகழ்வின் வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் வெளியான ஒரு வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் சிவகார்த்திகேயனின் நெற்றியில் திலகம் வைத்து அவரை ஆசீர்வதிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அந்தக் காட்சிக்கு பின்னால் இர்க்கும் வசனம் தான் இப்போது பலருடைய கவனத்தையும் திருப்பியிருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் போஸ்டர் வரிகள்

    "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற திருக்குறள் வரியைத்தான் அந்தக் காட்சிக்கு சிவகார்த்திகேயன் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு இது ஒரு சாதாரண ரசிகர் பாசத்தை காட்டும் போட்டோ போலத்தான் தெரிகிறது. ஒரு வயதான பெண் நடிகரை ஆசீர்வதிக்கிறார். அவரும் அந்த அன்பை ஏற்றுக்கொள்கிறார். அதற்கு "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற வரி பொருத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் ரசிகர் அமைப்புகள் தொடர்பாக நடந்த சில விஷயங்களை சேர்த்து பார்த்தால், இந்த ஒரு வரியைச் சுற்றியும் இப்போது விவாதம் கிளம்பியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியபோது, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் வரி அவரது கட்சி அடையாளத்துடன் அதிகமாக கவனம் பெற்றது.

    Advertisement

    அரசியல் முன்னோட்டம்

    அதன்பிறகு தனுஷின் ரசிகர் மன்றக் கொடி அறிமுகமானபோதும் ஒரு வாசகம் பெரிய அளவில் பேசப்பட்டது. "எண்ணம் போல் வாழ்க்கை... எண்ணம் போல்தான் வாழ்க்கை." தனுஷின் ரசிகர் மன்றக் கொடியில் அவரது புகைப்படத்துடன் இந்த வாசகமும் இடம்பெற்றிருந்தது. அந்தக் கொடி வெளியான நேரத்திலேயே, "இது அரசியல் பயணத்துக்கான முன்னோட்டமா?" என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. அதே நேரத்தில் தனுஷ் தரப்பில் இது பல ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் கொடி என்றும், அதை வைத்து அரசியல் வருகையை முடிவு செய்ய முடியாது என்றும் விளக்கம் வெளியானது.

    Advertisement
    சேயோன் படத்தில் சீமான்.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு புது ட்விஸ்ட்

    மூன்று போஸ்டர்கள்

    இப்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் போஸ்டரும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது.

    விஜய் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

    தனுஷ் - "எண்ணம் போல் வாழ்க்கை"

    சிவகார்த்திகேயன் - "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

    3 பேரும் நடிகர்கள். 3 பேருக்குமே பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதிலும் இப்போது 3 பேரின் ரசிகர் அமைப்புகள் பற்றிய பேச்சும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த ஒப்பீட்டுக்கு காரணம். சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை இந்த விவாதம் இன்னும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு, சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பும் ஒரு முக்கிய காரணம்.

    Advertisement
    ரசிகர்களை கூட்டி சிவகார்த்திகேயன் செய்த விஷயம்... பின்னணி என்ன? பக்கா பிளான்!

    சிவகார்த்திகேயனின் பேச்சு

    தமிழகம் முழுவதிலும் இருந்து நற்பணி இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர் சந்தித்திருக்கிறார். 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணம், ரசிகர்கள் தனக்கு கொடுத்த ஆதரவு, நற்பணி செய்வதன் அவசியம் என்று பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். குறிப்பாக, "நான் செல்ஃப் மேட் கிடையாது, மக்களால் உருவாக்கப்பட்டவன்" என்றும், அந்த மக்களுக்காக ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்றும் அவர் பேசியது ஏற்கனவே கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement
    சிவகார்த்திகேயன் பற்றி ஜாடையாக திட்டிய கங்கை அமரன்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு.. இப்படியும் நடந்ததா?

    ரசிகர்களின் ஒப்பீடு

    இதெல்லாம் சேர்ந்து பார்க்கும்போதுதான் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது. சிவகார்த்திகேயனும் ஏதாவது சொல்லாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டாரா? என்று கேட்கிறார்கள். சிலர், இதெல்லாம் அரசியல் கிடையாது. ரசிகர்கள் மீது இருக்கும் அன்பை காட்டுவதற்காகத்தான் அந்த திருக்குறளை வைத்திருக்கிறார் என்கிறார்கள். இன்னும் சிலரோ, விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் இப்படித்தான் ரசிகர் மன்றம், நற்பணி, ரசிகர்களுடன் நெருக்கம் என்று விஷயங்கள் படிப்படியாக நடந்தன. தனுஷ் விஷயத்திலும் ஒரு வாசகம், ரசிகர் கொடி என்று விவாதம் கிளம்பியது. இப்போது சிவகார்த்திகேயனுக்கும் அதே மாதிரி கவனம் கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

    English Summary

    Sivakarthikeyan: Sivakarthikeyan has been releasing videos of his meetings with fans and office-bearers of his welfare associations. One such video features an elderly woman applying a *tilak* to his forehead and blessing him. It is the dialogue accompanying this moment that has now captured everyone's attention.