சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகையே கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு. கடந்த இரண்டு நாட்களாக அவரது இல்லத்தில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் ரசிகர்களின் மனதை உருக வைத்துக் கொண்டே இருக்கிறது. குடும்பத்தினரின் கதறல், திரையுலக பிரபலங்களின் கண்ணீர், ரசிகர்களின் அஞ்சலி என எங்கு பார்த்தாலும் சோகமே நிறைந்திருந்தது.
அந்த சோகத்திற்கு நடுவே நடந்த சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இருளில் மூழ்கிய வீடு
பாக்யராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில், நள்ளிரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் இருள் சூழ்ந்த அந்த சூழ்நிலையில், தந்தையின் உடலருகிலேயே நின்று கொண்டிருந்த மகன் சாந்தனு, தந்தையின் உடலுக்கு அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்த காட்சிகள் பலரையும் கலங்க வைத்தன.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, "கடைசி நிமிடம் வரை அப்பாவை விட்டு நகராத மகன்", "இது எந்த மகனாலும் தாங்க முடியாத தருணம்" என்று ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
பாக்யராஜின் இறுதி ஊர்வல வாகனமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது வாழ்நாள் அடையாளமாக இருந்த எழுத்தை நினைவுகூரும் வகையில், வாகனத்தின் முன்பகுதியில் "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்று அவரது கடிதங்களின் பாணியில் எழுதப்பட்ட ஒரு லெட்டர் பேடு வடிவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒரு பேனாவும் வைக்கப்பட்டிருந்தது. திரைக்கதை, வசனம், எழுத்து என வாழ்நாள் முழுவதும் பேனாவோடு வாழ்ந்த கலைஞருக்கு அளிக்கப்பட்ட அந்த மரியாதை பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. அந்த வார்த்தையை தொட்டபடி கதறிய சாந்தனு இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு, சாந்தனு அந்த "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்ற வாசகத்தை கைகளால் தொட்டு வணங்கினார். அதன் பிறகு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தன. அவரை குடும்பத்தினரும், நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் தேற்ற முயன்றாலும், தந்தையை இழந்த மகனின் வேதனையை வார்த்தைகளால் ஆற்ற முடியவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துணையுடன் சாந்தனு அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தார். ஒவ்வொரு சடங்கையும் கண்ணீருடன் செய்த மகனை பார்த்து அங்கிருந்த பலரும் கண்கலங்கினர். பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நேற்று அஞ்சலி செலுத்தியிருந்த பல திரையுலக பிரபலங்களும், இன்று இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதி பயணத்தில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் வாகனத்தை தொடர்ந்து நடந்தபடி சென்ற காட்சிகள் சோகத்தை மேலும் அதிகரித்தன. இதேநேரத்தில், பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பாக்யராஜ் வளர்த்த நாய் நீண்ட நேரம் அங்கிருந்து நகராமல் இருந்ததாகவும், இறுதி சடங்கு நடைபெற்ற நேரத்தில் மேலே கழுகு வட்டமிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பரவி வருகின்றன. "இயற்கையே ஒரு மகத்தான கலைஞருக்கு விடை கொடுத்தது போல இருந்தது" என்று உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைக்கதை மூலம் கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த மனிதரின் கடைசி பயணம் மட்டும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்தது. ஆனால் அவர் எழுதிய கதைகள் போலவே, "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்ற அந்த ஒரு வாசகம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும்.அன்புடன் உங்கள் பாக்யராஜ்
மகனின் கைகளால் இறுதி சடங்கு
”முட்டாள்” கொஞ்சம்கூட அறிவேயில்லையா? முருங்கைக்காய் கட்டுடன் வந்த கூல் சுரேஷ்! வெளுத்த நெட்டிசன்கள்
இறுதி ஊர்வலம்
கண்ணீர் விட்ட நாய், வட்டமிட்ட கழுகு
பாக்யராஜ் உடலை கண்ணீருடன் சுமந்த சரத்குமார், பார்த்திபன்.. கதறி அழுத சாந்தனு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்