விஜய் சேதுபதி செய்ததை மறக்க முடியாது.. அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா உருக்கம்

  • சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடித்த அண்ணாமலை சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஐஸ்வர்யா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமா, சீரியலை விட்டு விலகிவிட்டார். இவர் சமீபத்தில் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் விஜய் சேதுபதி தனக்கு செய்த எதிர்பாராத செயலை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    பொதுவாக சில நடிகைகளை பார்த்தால் ஏதோ பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும். அப்படி ஒரு நடிகை தான் ஐஸ்வர்யாவும். அவர் 15 வயதிலேயே சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டாராம். ஆனால் விருப்பப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் சூட்டிங் போக மாட்டேன் என்று அழுது இருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் நடிக்க வந்திருந்தாராம்.

    Advertisement

    சீரியல் நடிகை ஐஸ்வர்யா

    ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு அண்ணாமலை சீரியலில் ஜோதி கேரக்டர்தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்திருந்தாலும் எனக்கு சினிமாவை விட சீரியலில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அதிலும் ஒரு கல்லூரியின் கதை படத்தில் ஆர்யாவுடன் இவரும் நடிப்பதாக இருந்திருக்கிறது.

    சினிமா வாய்ப்பு மறுப்பு

    அந்த சமயத்தில் அவருக்கு தெலுங்கில் சீரியல் ஆஃபர் வந்ததும் பட வாய்ப்பு வேண்டாம் என்று வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு போய்விட்டாராம். இப்போது படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பட வாய்ப்பை விட சீரியல் வாய்ப்பை எனக்கு போதும் என்று நினைத்து இருந்திருக்கிறார். அதுபோல விஜய் சேதுபதி உடன் பெண் சீரியலில் நடித்து இருக்கிறார்.

    Advertisement

    விஜய் சேதுபதி செய்த செயல்

    அந்த சீரியலில் விஜய் சேதுபதி இவருக்கு அண்ணன் கேரக்டர். அதுபோல அட்டகத்தி தினேஷ் இவருக்கு தம்பியாக நடித்திருந்தாராம். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா பட ப்ரமோஷனில் ஐஸ்வர்யாவின் தங்கச்சி விஜய் சேதுபதியிடம் இவரை பற்றி பேசி இருக்கிறார். உடனே விஜய் சேதுபதி வீடியோ கால் பண்ண சொல்லி இவரிடம் பேசினாராம். அப்போது பெண் சீரியலில் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள், அதிலும் சில குறிப்பிட்ட சீன்களைப் பற்றி எல்லாம் விஜய் சேதுபதி ஞாபகம் வைத்து இவரிடம் பேசினாராம்.

    மறக்க முடியாத சந்தோஷம்

    விஜய் சேதுபதி எனக்கு பேசியது ரொம்ப சந்தோஷம், நான் டைம் லைட்டில் கூட இல்லை அப்படி இருக்கும்போது அவர் எனக்காக வீடியோ கால் செய்து, பழைய விஷயங்களை எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் அவர் போன் பண்ணுனார். அவர் ரொம்ப எளிமையானவர் என்று பெருமையாக பேசி இருந்தார்.

    Advertisement

    அம்மாவான வடிவுக்கரசி

    அதேபோல நடிகை வடிவுக்கரசி குறித்தும் ஐஸ்வர்யா பேசியிருந்தார். சீரியலில் ஐஸ்வர்யாவிற்கு வடிவகரசி அம்மா கேரக்டரில் நடித்து இருக்கிறார். ஆனால் நிஜத்திலும் எனக்கு அவர் இப்ப வரைக்கும் அம்மா மாதிரி தான், நான் என்னுடைய போனில் கூட அம்மா என்று தான் அவரது நம்பரை சேவ் பண்ணி வைத்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளும் வடிவுகரசி அம்மாவை அம்மா என்று தான் கூப்பிடுவாங்க, என்னுடைய அம்மாவின் பெயரைக் கூட மம்மி என்று சேவ் பண்ணி வைத்திருக்கிறேன். ஆனால் வடிவுக்கரசி அம்மா எனக்கு எப்பவுமே ரொம்ப பெஸ்ட் என்று ஐஸ்வர்யா அந்த பேட்டியில் பேசியிருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாத ஐஸ்வர்யா கொடுத்த இந்த பேட்டி இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    English Summary

    Actress Aishwarya: Actress Aishwarya, who rose to fame through the serial *Annamalai*—starring Radhika Sarathkumar in the lead role—also acted in a few films. However, she stepped away from cinema and television serials after her marriage. A recent interview she gave to a private news channel is currently going viral online; in it, she speaks movingly about an unexpected gesture Vijay Sethupathi made towards her.