சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள அண்ணாமலையின் வி த லீடர்ஸ் அமைப்பு பற்றி நடிகர் ஆரி பேசிய கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்திய பேட்டியில் பேசிய ஆரி கடந்த 8 வருஷங்களாக "மாறுவோம் மாற்றுவோம்" என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை நடத்தி வருகிறேன், ஆனால் இப்போது அதே பெயரை அண்ணாமலை தனது கட்சியில் பயன்படுத்தி இருக்கிறார் என்று ஆரி கூறி இருக்கிறார்.
நடிகர் ஆரி பேட்டி
அதாவது, தான் சில மாதங்களாக சூட்டிங் பிஸியாக இருந்ததால் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் அதிகமாக தெரிந்து கொள்ளவில்லை. எனக்கு அதிகமான நண்பர்கள் சில வீடியோக்களை அனுப்பி உன்னுடைய அமைப்பின் பெயரில் அண்ணாமலையின் புதிய மக்கள் இயக்கத்தில் பயன்படுத்தி இருக்கிறார் அதனால் அதை கொஞ்சம் கவனி என்று என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு பிறகு தான் நானும் செக் பண்ணி பார்த்தேன். நான் இந்த அமைப்பை தொடங்கும் போது எல்லா புரோசிஜரையும் சரியாக செய்து, ரூல்ஸ் படி "மாறுவோம் மாற்றுவோம்" என்ற அமைப்பை பதிவு செய்து இருக்கிறேன். ஆனால் அண்ணாமலை சார் எப்படி அதே பெயரில் தொடங்கினார் என்று தான் எனக்கு தெரியவில்லை. எப்படியும் அவரும் தொடங்குவதற்கு முன்பு இந்த பெயரில் இதற்கு முன்பு வேறு ஏதாவது அமைப்பு இருக்கிறதா என்று செக் பண்ணி பார்த்து இருப்பார்... ஆனால் அதில் எப்படி இது மிஸ் ஆனது என்று எனக்கு தெரியவில்லை.
இதில் நான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. உங்களுக்கு அந்த பெயரே தான்.. வேண்டுமா? வேண்டுமானால் நானே தந்து விடுகிறேன். உண்மையில் இதைப் பற்றி நான் உங்களுக்கு நேரடியாக போன் செய்து கேட்டிருக்க வேண்டும். ஆனால் உங்க போன் நம்பர் என்னிடம் இல்லை அதனால் தான் இந்த பேட்டி மூலமாக சொல்கிறேன். உங்களுக்கு அந்த பெயர் முக்கியம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்களே என்னை தொடர்பு கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஆரி சிரிப்புடன் கூறினார். இந்த பேட்டி வெளியான பிறகு இது கிண்டலா? இல்ல பெருந்தன்மையா? என்று சோசியல் மீடியாவில் பலரும் விவாதிக்க தொடங்கி விட்டனர். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்பில் இருந்து விலகிய பிறகு வீ த லீடர் என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அரசியல் விழிப்புணர்வு, இளைஞர் பங்கேற்பு, நல்லாட்சி, தலைமைத்துவ பயிற்சி மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த இயக்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த இயக்கத்தில் முழக்கமாக பயன்படுத்தப்பட்ட மாறுவோம் மாற்றுவோம் என்ற வாசகம் தான் தற்போது ஆரியின் கருத்துக்கு காரணமாக இருக்கிறது. அதுபோல ஆரியிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீங்களா? அண்ணாமலையுடன் இணைந்து பயணிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் காலம்தான் பதில் சொல்லும். அந்த நேரத்தில் எனக்கு மனநிலை எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து தான் இருக்கும் என்று ஓபனாகவே சொல்லி இருக்கிறார். நடிகராக அறிமுகமான ஆரி பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு தான் அவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் டைட்டில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆரி என்றால் நேர்மை, துணிச்சல், தைரியம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இப்போது அவர் அண்ணாமலையின் இயக்கத்தின் பெயரை பற்றி பேசி இருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.அண்ணாமலையிடம் கேள்வி
அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பு