ஆண் தேவதைகள்.. அவர்கள் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கோங்க! நள்ளிரவில் எமோஷனலாக பேசிய அறந்தாங்கி நிஷா

  • சென்னை: விஜய் டிவி பிரபலமும், நடிகையுமான அறந்தாங்கி நிஷா நள்ளிரவில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஆண்கள் படும் கஷ்டங்கள், அவர்கள் செய்யும் தியாகங்கள் போன்றவற்றை எமோஷனலாக பேசியிருக்கிறார்.
    இந்த வீடியோவில் ஆண்கள் பலரும் தங்களுடைய வலி வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    அறந்தாங்கி நிஷாவை சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக போட்டியளராக அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இப்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

    Advertisement

    அறந்தாங்கி நிஷா வீடியோ

    தான் செய்யும் உதவிகள், தன்னுடைய நிகழ்ச்சி பற்றிய வீடியோக்கள் அடிக்கடி பகிர்ந்து வரும் அறந்தாங்கி நிஷா இப்போது வெளிநாட்டில் இருந்தபடி ஆண்கள் படும் வேதனையை ஒரு வீடியோவில் சொல்லி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, நான் இப்போது சவுதியில் இருக்கிறேன். இங்கே வந்து சேர்ந்ததுமே அனல் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. நம்ம ஊரில் நாம ஐயோ வெயில் அடிக்கிறது என்று சொல்லுவோம் ஆனால் நம்ம ஊரு வெயிலை விட 3 மடங்கு அதிகமாக எங்கே இருக்கிறது.

    முகத்தில் வெயில் படும் போது தீ போல எரிகிறது. எனக்கு இங்கே புதியது அல்ல. என்னுடைய கணவர் இங்கேதான் 40 வருஷமாக வேலை பார்த்திருக்கிறார். அதுபோல என்னுடைய அண்ணன், தம்பி சொந்தக்காரங்க என பலரும் இங்கே கஷ்டப்பட்டு வேலை பாக்குறாங்க. அதனால நான் இங்கே வந்ததும் எல்லோரும் என்னை வந்து பார்த்துட்டு போனாங்க. அப்போது எனக்கு ஒரு வருத்தமும் இருந்தது. இங்கே இருக்கிற ஆண்கள் எல்லோருமே ஆண் தேவதைகள் தான்.

    Advertisement

    வெளிநாட்டு வேதனைகள்

    அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், காரணம் ஊரில் இருக்கும் அவர்களுடைய மனைவி, குழந்தைகள் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள் அங்கே அவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நம்ம ஊரில் சாதாரணமாக தெரியும் சாப்பாடு கூட இங்கு தேவாமிர்தமாக இருக்கிறது. ஒவ்வொரு சாப்பாட்டிலும் 1 ரூபாய், 2 ரூபாய் என்று அவர்கள் மிச்சம் பிடித்து தான் நமக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    உறவினர்களுக்கு அட்வைஸ்

    இவர்களின் கஷ்டத்தை உணர்ந்து ஊரில் இருக்கும் உறவினர்கள், குடும்பத்தினர் எல்லோரும் அந்த பணத்தை செலவு செய்ய வேண்டும். நம்முடைய உறவினர்கள் முன்பு நாம கெத்து காட்ட வேண்டும், பெருமை காட்ட வேண்டும் என்று இவர்கள் கஷ்டப்பட்ட பணத்தை நாம வீணாக செலவழித்து விடக்கூடாது, குழந்தைகளும் இப்படி கஷ்டப்படுகிற அப்பாக்கள் சகோதரர்களுக்காக நல்ல படித்து நல்ல வேலைக்கு போய்விட வேண்டும்.

    Advertisement

    இங்கே அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் இது எல்லாமே குடும்பத்தினருக்காக தான் என்பது குடும்பத்தினருக்கு தெரிய வேண்டும். இந்த வீடியோ நான் வெளியிடுவதற்கு காரணம் என்னால் இங்கே ஒருநாள் கூட தாக்கு பிடிக்க கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இங்கு இருப்பவர்கள் பல வருடங்களாக இது போன்ற கஷ்டங்களை அனுபவித்து குடும்பத்திற்காக உழைக்கிறார்கள், அந்த உழைப்புக்கு குடும்பத்தினரின் சப்போட்டும் அன்பும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என அறந்தாங்கி நிஷா உருக்கமாக பேசி இருக்கிறார்.

    ஆண் தேவதைகள்

    அவருடைய இந்த பேச்சுக்கு பலரும் நன்றி சொல்லி வருகின்றனர். ஒரு சிலர் இந்த வீடியோவுக்கு கீழே தங்கள் படும் கஷ்டங்களையும் பகிர்ந்து இருக்கின்றார்கள். அதிலும் ஒரு சிலருக்கு தாங்கள் என்னதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அனுப்பினாலும் வீட்டில் இருப்பவர்கள் தங்களுடைய கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் உனக்கென்ன நீ வெளிநாட்டில் தானே இருக்கிறாய் என்று அலட்சியமாக பேசுகிறார்கள்.

    Advertisement

    நாங்க சொந்த ஊரில் இருக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும் என்பதற்காக தான் இங்க கஷ்டப்படுகிறோம் ஆனால் சில மனைவிகள் கூட இதை புரிந்து கொள்ளாமல் நீ எங்களை தவிக்க விட்டுட்டு அங்க போய் சொகுசா இருக்கிற என்று சொல்லுறாங்க என்று சிலர் தங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வெளிநாட்டில் இருப்பவர்கள் படும் கஷ்டத்தை குடும்பத்தினரிடம் சொல்லவில்லை, அப்படி சொல்லிவிட்டால் குடும்பத்தினரால் தாங்க முடியாது என்பதற்காகத்தான் நாங்கள் இவ்வளவு வேதனைகளை தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் தங்கள் கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள்.

    English Summary

    Aranthangi Nisha: A video released late at night by Vijay TV celebrity and actress Aranthangi Nisha is going viral on the internet. In it, she speaks emotionally about the hardships men face and the sacrifices they make. Many men are sharing their pain and anguish in response to this video.