நடுராத்திரி வீட்டை விட்டு துரத்தப்பட்ட அறந்தாங்கி நிஷா.. மாற்றுதுணி இல்லாமல் பட்ட கஷ்டம்.. வெளியே தெரியாத சோகம்

  • சென்னை: மேடையில் அறந்தாங்கி நிஷா பேச ஆரம்பித்துவிட்டால் அரங்கமே சிரிப்பில் அதிரும். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை கூட காமெடியாகவே மாற்றி பேசுவது அவருடைய ஸ்டைல். ஆனால் இன்று விஜய் டிவி பிரபலமாகவும் நடிகையாகவும் உயர்ந்திருக்கும் அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து கேபிஒய் பழனி பேசி இருப்பது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    அறந்தாங்கி நிஷா தன்னை தானே சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லி காமெடி செய்து கொண்டு இருப்பார். அதை பார்த்து பலரும் அவரை ட்ரோல் செய்தாலும் அதை அவர் கண்டு கொள்வதே இல்லை. புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது கூட தன்னால் முடிந்த அளவிற்கு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஆனாலும் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து கேபிஒய் பழனி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    கேபிஒய் பழனி பேட்டி

    பழனி பேசுகையில் அறந்தாங்கி நிஷாவின் கணவர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் அவருடைய குடும்பத்தினருடன் அறந்தாங்கி நிஷாவிற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அப்போது குடும்பத்தினர் அறந்தாங்கி நிஷாவை நடுராத்திரி வீட்டை விட்டு துரத்தி விட்டனர். கையில் குழந்தையுடன் அவர் நடுத்தெருவில் வந்து நின்றிருக்கிறார். இப்போ இருக்கிற மாதிரி அப்போ செல்போன் வசதி கூட கிடையாது. அந்த நேரத்திலும் அவருடைய அப்பா சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்து அறந்தாங்கி நிஷாவை கூட்டிக்கொண்டு போனார்.

    இவ்வளவு கேவலமாக பண்ணுறீங்களே.. நடந்தது இதுதான்! CWC திவாகர் பிரச்சனைக்கு அறந்தாங்கி நிஷா விளக்கம்
    ஆனால் போகும்போது இனி நான் உன்னுடைய வீட்டுக்கு என் பொண்ணை அனுப்பி வைக்கவே மாட்டேன் என்று சண்டை போட்டுட்டு போனார். இப்படி வெளியே தெரியாத பல விஷயங்கள் அறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்திருக்கிறது. எல்லா வீட்டிலும், குடும்பங்களிலும் சண்டைகளும் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் வெளியில் தெரியவில்லை என்பதற்காகவே நிஷாவின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை நான் இப்போ சொல்கிறேன் என்று பழனி சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    அறந்தாங்கி நிஷா குடும்ப சண்டை

    அதோடு இன்னொரு சம்பவத்தையும் அவர் கூறினார். அதாவது ஒருமுறை வெளிநாட்டில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அறந்தாங்கி நிஷா சென்றிருந்தாராம். அப்போது அங்கு அவருக்கு அம்மை நோய் வந்து விட்டதாம். அம்மை நோய் வந்து விட்டால் உடனே நாட்டை விட்டு வெளியே வர முடியாது என்பதால் அவர் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம். ஆனாலும் அந்த சமயத்தில் அறந்தாங்கி நிஷாவிடம் ஒரே ஒரு நைட்டி மட்டும்தான் இருந்ததாம்.

    வெளிநாட்டில் பட்ட கஷ்டம்

    அந்த ஒரு நைட்டியை வைத்து தான் அவர் ஒரு வாரமாக அங்கேயே சமாளித்தாராம். இப்படி பல கஷ்டங்களை தாண்டி தான் அரந்தாங்கி நிஷாவும் வந்திருக்கிறார். இப்ப வரைக்கும் எனக்கு அவர் நல்ல தோழியாக இருக்கிறார். நாங்க கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எப்படி என்னிடம் பழகினாரோ அதேபோல இப்பவும் இருக்கார். ஆனால் எல்லோரும் இப்படி இருப்பார்களா? என்று கேட்டால் அது சந்தேகம்தான் என்றும் பழனி சொல்லி இருக்கிறார். பழனி அறந்தாங்கி நிஷா பற்றி சொன்ன விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.

    Advertisement

    English Summary

    Aranthangi Nisha: When Nisha sleeps on the stage and starts talking, the whole arena shakes with laughter. His style is to turn even the difficulties in his life into comedy. But today, KPY Palani's talk about the hardships faced by Aranthangi Nisha, who has risen as a Vijay TV celebrity and actress, is getting attention on social media.