சென்னை: நடிகர் விஜய் பற்றி பல வருஷங்களாகவே ஒரு கருத்து ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அவர் சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக பேசமாட்டார் அமைதியாகவே இருப்பார் என்று பலரும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அந்த பிம்பம் எப்படி உருவாகிறது? என்பதற்கு நடிகை ஷகிலா தற்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
ஷகிலா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது அழகிய தமிழ் மகன் படப்பிடிப்பில் நடந்த சில விஷயங்களை பற்றி பேசுகிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஷகிலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற ஒரு அடையாளம் இருந்தது. பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தது மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய நிஜ கேரக்டரை பார்த்த பிறகு தான் அவர் மீது இருந்த ஒரு பார்வை ரசிகர்களுக்கு மாறியது.
நடிகை ஷகிலா பேட்டி
அதுபோல பேட்டிகளிலும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். இவரும் பல பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார். அதுபோல சினிமா துறையில் தான் சந்தித்த அனுபவங்கள், அவமானங்கள் போன்றவற்றை கூட பேசி இருக்கிறார். அந்த வரிசையில் தான் அழகிய தமிழ் மகன் படத்தை பற்றி சொல்லும் போது, நான் அந்த படத்தில் நடிக்க போறேன்னு தெரிஞ்சதும் யூனிட்டிலிருந்து சிலர் விஜய் யார்கிட்டயும் பேச அதிகமாக பேச மாட்டார் என்று சொன்னாங்க.
உடனே நான் அப்படின்னா எனக்கு விஜய் கூட மட்டும் ஷாட் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதாவது ஆரம்ப காலத்திலேயே விஜய் எனக்கு நன்றாகவே தெரியும். நல்ல பழக்கம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது சூட்டிங்கில் என்னை பார்த்தும் பேசாம போயிட்டாருனா அது நம்ம தப்பா? அவர் தப்பா? என்று மனசுக்குள்ள தேவை இல்லாத சங்கடம் வரும் அதனால் தான் அவர் கூட காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் நினைத்ததற்கு நேர் மாறாகவே நடந்தது. என்னுடைய முதல் ஷார்ட் அவர் கூட தான். என்னை பார்த்த உடனே அவர் ஹாய் ஷகினு கூப்பிட்டாரு. அப்போ மொத்த யூனிட்டும் என்னை திரும்பி பார்த்தாங்க விஜய் இப்படித்தான் யார்கிட்டயும் பேச மாட்டார் என்று சிலர் ஒரு பின்பத்தை உருவாக்கி விட்டாங்க. ஆனால் அவர் நல்ல பழகுறவங்களை மறக்கவே மாட்டாரு பழசையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பார். அழகிய தமிழ் மகன் படம் 2007 இல் வெளியானது. இயக்குனர் பரதன் இயக்கிய அந்த படத்தில் விஜய் டபுள் கேரக்டரில் நடித்திருப்பார். ஸ்ரேயா, நமீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் விஜய்யின் சினிமாவில் பெயர் வாங்கிய படம். இந்த நிலையில் தான் ஷகிலா பேசியது பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆனாலும் சில நெட்டிசன்கள் இதையும் கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது இப்போது விஜய் சிஎம் ஆனதும் அவருடன் நடித்த எல்லா நடிகர்களும் அவரைப் பற்றியே பேசி வருகிறார்களே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.விஜய் பற்றி பேசிய ஷகிலா
ரசிகர்கள் கருத்து