Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?


  • சென்னை: 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி நடிப்பில் வெளியாகியுள்ள 'பிளாஸ்ட்' (Blast) திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.1 கோடி நிகர வசூலை (Net Collection) ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் அர்ஜுன் கோலிவுட்டில் மீண்டும் ஒரு வலுவான கம்பேக் கொடுத்துள்ளார்.

    Advertisement

    ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், நேற்று இந்தியா முழுவதும் மொத்தம் 1,022 திரையிடல்களில் வெளியானது.

    Advertisement

    முதல் நாளில் நாடு தழுவிய அளவில் 'பிளாஸ்ட்' திரைப்படம் ஒட்டுமொத்தமாக ₹1.15 கோடி மொத்த வசூலை (Gross) அள்ளியுள்ளது.

    தமிழ்நாடு: ₹95 லட்சம் (அதிகபட்ச வசூல்)

    கர்நாடகா: ₹10 லட்சம்

    கேரளா: ₹7 லட்சம்

    ஆந்திரா , தெலங்கானா: ₹1 லட்சம்

    இதர இந்தியப் பகுதிகள்: ₹2 லட்சம்

    இரவு காட்சிகளில் அசுர வளர்ச்சி: பிரபல சினிமா வர்த்தக வலைத்தளமான 'சாக்னில்க்' (Sacnilk) தகவல்படி, இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மட்டும் ஒட்டு மொத்தமாக 28.01 சதவீத occupancy பதிவாகியுள்ளது.

    காலையில் தியேட்டர்களில் மொத்த இருப்பில் 15.46% ஆகத் தொடங்கிய திரையரங்கு occupancy, மதிய காட்சிகளில் 25.69% ஆகவும், மாலை காட்சிகளில் 26.92% ஆகவும் படிப்படியாக உயர்ந்தது. பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவியதால், இரவு காட்சிகளில் அதிகபட்சமாக 40.31% ஆக அதிகரித்தது. இது படம் போகப் போகப் பார்வையாளர்களின் வருகை பன்மடங்கு உயர்ந்ததைக் காட்டுகிறது.

    Advertisement

    ரசிகர்களின் ஆரம்பகட்ட விமர்சனம்: சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆரம்பகட்ட கருத்துக்கள் படத்திற்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளன. குறிப்பாகப் படத்தின் ஆக்‌ஷன் கோரியோகிராபியும், அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.

    திரையரங்குகளில் படத்தின் இடைவேளைக் காட்சியும் (Intermission Block), விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    கதைக்களம்: ஒரு நடுத்தர வர்க்க தற்காப்புப் பயிற்சிக் குடும்பம், சமுதாயத்தில் உள்ள பலவீனமானவர்களைப் பாதுகாக்கப் பயிற்சி அளிக்கிறது. சூழ்நிலை காரணமாக, அந்தக் குடும்பம் ஒரு சக்திவாய்ந்த குற்றக் கும்பலுடன் ஆபத்தான மோதலில் சிக்குகிறது.

    Advertisement

    அந்தச் சவால்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற கிரிஸ்பியான ஆக்‌ஷன் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

    பின்னணிக் குழு மற்றும் நட்சத்திரப் பட்டாளம்: அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் மற்றும் பாலா ஹசன் ஆர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

    'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படப் புகழ் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்க, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பையும், வீரமணி கணேசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

    Advertisement

    26 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கூட்டணி: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாதி எஸ். அகோரம், கல்பாதி எஸ். கணேஷ் மற்றும் கல்பாதி எஸ். சுரேஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பாதி மற்றும் ஐஸ்வர்யா கல்பாதி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

    இப்படத்தின் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கடந்த 2000-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வானவில்' திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 26 ஆண்டுகள் கழித்து அர்ஜுன் சர்ஜாவும், நடிகை அபிராமியும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பிளாஸ்ட்' என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படத்தின் வசூல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Arjun Sarja has made a strong comeback in Kollywood with his action-packed film Blast, which reportedly earned over ₹1 crore in net collection across India on its opening day. The film’s impressive start has generated excitement among fans and trade circles alike.