சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்‌ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக


  • சென்னை: மூத்த நடிகரான சிவகுமார் பொது மேடை ஒன்றில் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்கள் குறித்துப் பேசியுள்ள அதிரடியான கருத்துக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.. குறிப்பாக தமிழக அரசியல் களம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சிவகுமார் வெளிப்படுத்திய எண்ணங்கள் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.. சிவகுமார் தவெக அரசு பற்றி பேசியபோது, அருகிலேயே நடிகர் சத்யராஜும் உடனிருந்தது கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் கலந்து கொண்டனர்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

    Advertisement

    சத்யராஜ் பேசும்போது, உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விலக வேண்டும்.. விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது” என்றார்.

    பிறகு மூத்த நடிகர் சிவக்குமார் பேசுகையில், "என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை தான். 1958-ஆம் ஆண்டு காபி, டீ குடிக்காமல் வாழ்ந்து வருகிறேன்.

    நடிகர் சிவகுமார் அதிரடி பேச்சு

    இன்றைய காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருக்கிறார்கள். செல்போனை விட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது. எனக்கு தற்போது 85 வயது. தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவேன்.

    Advertisement

    அரசியலை பொறுத்தவரை, காமராஜர் 9 வருடம் சிறையில் இருந்தார்.. 9 வருடம் நாட்டை ஆண்டார்.. அவர் சாகும்போது தலைமாட்டில் 140 ரூபாயும், 2 ஜோடி செருப்பு, 4 ஜோடி சட்டைகள், ஐந்தாறு புத்தகங்கள் மட்டுமே இருந்தன.. இதுதான் இவரது மொத்த சொத்தும்.. இப்படியொரு தலைவரை பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட காமராஜரையே மக்கள் தோற்கடித்தார்களே? ஏனென்றால் அப்போது காமராஜர் தேவையில்லை, மாற்றம் வேண்டும் என்றார்கள்..

    விஜய் நல்லது செய்வார்

    1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும்,. முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம்,. "தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி. விட்டன" என்று சொன்னார்.. அதை எப்படி விஷக்கிருமிகள் என்று சொல்ல முடியும்? பிடிக்காமலா 69 வருடங்களாக திமுக செயல்படுகிறது.. ஆனால் அதுவும் பிடிக்காமல்தான் இன்று விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளார்கள். யார் வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.. மக்கள்தான் நீதிபதிகள். மக்கள் அப்படி முடிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    Advertisement

    90 சதவீதம் முதல் முறையாக ஓட்டுப்போடுகிறவர்கள் காசு வாங்காமலேயே ஓட்டுப்போட்டுள்ளனர்.. என்னுடைய பேரன்கள், பேத்திகள் ஓட்டுப்போடுகிறார்கள்.. அவர்கள்தான் இனி வருங்காலம். அவர்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கும்போது அதை தவறு என்று சொல்ல நீங்கள் யார்? விஜய் நல்லது செய்வார் என்று நம்புவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    சத்யராஜ் ரியாக்‌ஷன்

    சிவகுமார் இப்படி பேசப்பேச சத்யராஜ் ஒருவித நெருடலுடன் அமர்ந்திருந்தார்.. காரணம் தீவிர திமுக ஆதரவாளரான சத்யராஜ், தேர்தல் ரிசல்ட் தினத்தன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்.. தங்களுடைய கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று விஜய் கூறியிருந்ததால், அவர்கள் வழிநின்று ஒரு சிறப்பான, சமூக நீதி ஆட்சியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் சத்யராஜ் கேட்டுக் கொண்டிருந்தார்.

    Advertisement

    ஆனால் சத்யராஜ் அத்துடன் விடவில்லை.. "இந்தத் திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த ஐந்த ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும், மன உறுதியோடும், மன மகிழ்வோடும் மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்" என அதிரடியாக கூறியிருந்தார்.

    சத்யராஜ் இந்த அளவுக்கு திமுக விசுவாசியாக இருக்கும்போது, மூத்த நடிகர் சிவகுமார் தவெக ஆட்சியை வரவேற்றும், பாராட்டியும் பேசியபோது சத்யராஜ் அதை அமைதியாக கவனித்தார்.. சிவக்குமார் தன்னுடைய கருத்தை சொன்னாலும், அதற்கு மறுப்பும், எதிர்ப்பும் காட்டாமல், நாகரீகத்துடன் அமைதியாக அமர்ந்து கவனித்ததை, சுற்றியிருந்த செய்தியாளர்களும் கவனிக்கவே செய்தனர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!

    English Summary

    கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு தமிழக அரசியல் மாற்றங்கள் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காமராஜரின் எளிமையையும், தற்போதைய வாக்காளர்களின் மனநிலையையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், விஜய்யின் வருகையை மக்கள் தீர்மானிப்பார்கள் எனக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் போது தீவிர திமுக ஆதரவாளரான நடிகர் சத்யராஜும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.