சென்னை: விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. அதில் அந்த படத்தை தயாரித்த அட்லி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அட்லி விஜய்க்கு ஆதரவாக விஜய் சேதுபதியை கலாய்ப்பது போலவே மேடையில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல, அதை இப்போது நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது விஜயை தாக்கி தான் என்ற விமர்சனம் ஒரு வாரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் இந்த விமர்சனத்திற்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்வார்? என்று எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி அந்த விஷயத்தை தொடவே இல்லை. அவுட் ஆப் சிலபஸ் போல எதைஎதையோ பேசி கொண்டிருந்தார்.
இதற்கு முன்பு சர்க்கார் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் போது ஜேசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னதற்கு விஜய் போன் பண்ணி நன்றி சொன்னார் என்று கூட பேசி இருந்தார். ஆனால் இப்போது போய்க் கொண்டிருக்கும் சர்ச்சையை பற்றி பேசவே இல்லை. இதற்கு பிறகு தான் இந்த படத்தின் தயாரிப்பாளரான அட்லி வந்து பேச தொடங்கினர். அட்லி பேசுகையில், இன்னைக்கு நான் போட்டிருக்கும் இந்த பேண்ட் சட்டை எல்லாம் என்னுடைய உழைப்பில் கிடைத்தது என்று நினைத்தாலும் என் அண்ணன் தளபதி இல்லனா இதெல்லாம் சான்சே இல்ல. நான் ராஜா ராணி பண்ணி பேமஸானேன். ஆனால் விஜய் அண்ணன் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து என் வாழ்க்கையை மாற்றினார். ஷாருக் சாரிடம் இருந்து வாய்ப்பு வந்ததை தெரிஞ்சதும் நீ என்ன பண்ணுவியோ தெரியாது அந்த படத்தை பண்ணு உன் வாழ்க்கை மாறும் என்று சொன்னாரு. அதே மாதிரி அதனால விஜய் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி என சொல்லிவிட்டு விஜய் போலவே ஒரு குட்டி ஸ்டோரியை சொல்ல தொடங்கினார். ஊர் வாயை அடைக்க முடியாது, ஆனால் ஊர் வாயில் விழுந்துட்டு நாம நம்பி வாழ்ந்துட்டு போறது முட்டாள்தனம். ஊரு ஆயிரம் பேசும் அதற்கு உதாரணமாக இப்ப ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுறேன். சலவை தொழிலாளி ஒருவர் இரண்டு ஊர் தாண்டி சென்று துணி துவைக்க வேண்டும். அதற்காக கழுதை மீது துணியை வைத்துக்கொண்டு போனாராம். முதல் ஊரை தாண்டும்போது ஏன் உனக்கு அறிவில்ல.. இப்படி கழுதை மேல இவ்வளவு துணியை வைத்து கூட்டிட்டு போறியேன்னு திட்டி இருக்காங்க. உடனே அவர் அந்த துணிகளை எல்லாம் தலை மீது வைத்து நடக்க தொடங்கி இருக்கிறார். அடுத்து ஊர்காரங்க கழுதையை சும்மா நடக்க விட்டுட்டு நீ துணியை சுமக்கிறியே உனக்கு அறிவில்லையா? என்று கேட்டிருக்காங்க. அதனால எவன் என்ன சொல்றான்னு கேட்காத.. நீ ஊருக்கு போகணுமா போயிட்டு இரு.. வாழ்க்கை நீ எங்க போனுமோ அங்க அழைத்து செல்லும். யார் பேச்சையும் கேட்காத. சின்ன சின்ன பொறிகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். நம்பாத அடுத்த தலைமுறை இந்த சோசியல் மீடியால அவரை சொல்றாரு.. இவரு இவரை சொல்றாரு... அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொல்லனும்னா நேரா சொல்லிக்கலாம். அடுத்த தலைமுறை அரசியலில் ஆர்வமாய் இருக்க ஒரே காரணம் விஜய் அண்ணா தான். முந்தைய தலைமுறை சட்டசபை நான் பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு சட்டசபையில் என்ன நடக்குதுன்னு 5 வயசு குழந்தை கூட பாக்குது என்று அட்லீ பேச பேச கேமரா விஜய் சேதுபதிக்கு போக்கஸ் காட்டியது. அப்போது விஜய் சேதுபதி கன்னத்தில் கை வைத்தபடி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அட்லி பேச்சை கவனித்துக் கொண்டே இருந்தார். இதை வைத்து தான் இப்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ஃபயர் விட்டாலும் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு அசிங்கம் தேவையா என்றும் சிலர் கலாய்க்கிறார்கள்.விஜய் சேதுபதி பேச்சு
அட்லி பேச்சு
அட்லி சொன்னா குட்டி கதை
விஜய் சேதுபதி ரியாக்ஷன்