அரசியல் தெரியாதுன்னு 10 நொடில மாத்தி பேசுறீங்களே அட்லீ! சட்டசபை கூட தெரியாதா? நெட்டிசன்கள் கலாய்

  • சென்னை: பத்தா ஆடியோ லாஞ்சில் அட்லீ பேசியது, விஜய் சேதுபதிக்கு கொடுத்த தரமான பதிலடி என்று விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில் இன்னும் சில நெட்டிசன்கள் அட்லீ பேசியதை கவனிச்சீங்களா? அவருக்கு அரசியல் தெரியாது, நான் அதை பேச மாட்டேன்னு சொல்லி 10 நொடியிலே மாத்தி பேசுறீங்களே என்று அவரை கலாய்க்கிறார்கள்.

    Advertisement

    பத்தா இசை வெளியீட்டு விழாவில் விஜயை பற்றி அட்லி பெருமையாகவே பேசி இருந்தார். நான் இன்னைக்கு போட்டு இருக்கிற பேண்ட், சட்டை, வாட்ச் எல்லாம் என்னுடைய உழைப்பில் நான் வாங்கியது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் விஜய் அண்ணனால் தான் நான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன்.

    Advertisement

    பத்தா இசை வெளியீட்டு விழா

    ஆரம்பத்தில் ராஜா ராணி படம் பண்ணி ஒரு பிரபலம் இருந்தாலும் என்ன நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தது விஜய் அண்ணன் தான். அதற்கு பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் கிடைத்தது. ஷாருக்கான் உடன் வாய்ப்பு வருகிறது என்று சொன்னதும் ஒழுங்கா அதை போய் பண்ணு உன் வாழ்க்கை மாறும் என்று சொன்னாரு. அது இப்போ நடந்துடிச்சி என்று பெருமையாகவே சொன்னாரு. மேலும் நான் அரசியல் பேசல.

    அட்லீ பேச்சு

    எனக்கு அரசியல் தெரியாது, இனி உள்ள தலைமுறை அரசியலில் வலுவாக இருக்கும் அதற்கு விஜய் அண்ணா தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை செயலகத்தில்...( என ஒரு நிமிடம் யோசித்து விட்டு) கீழே இருந்தவர்களிடம் அது என்னவென்று கேட்க, அங்கிருந்தவர்கள் சட்டசபை என்றதும் ஆமா சட்ட சபையில் நடக்கும் நிகழ்வுகளை 5 வயது குழந்தை கூட கவனிக்கிறது என்றால் அதற்கு காரணமும் விஜய் அண்ணா தான் என்று சொல்லி இருந்தார்.

    Advertisement

    நெட்டிசன்கள் கேள்வி

    இதுதான் இப்போ பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் பேச மாட்டேன் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு 10 நொடியில் உடனே அரசியல் பேசும் அட்லிக்கு பழைய விஷயம் எல்லாம் மறந்து போய்விட்டதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிலும் உங்களுக்கு சட்டசபைனா என்னென்ன கூட தெரியலையா?அதை கூட நீங்க அடுத்தவங்க கிட்ட கேட்டு தான் சொல்லுவீங்களா? அல்லது இதையும் ஒரு ஸ்டண்ட் என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்களா?

    விஜய்க்கு பிரமோஷன் இப்போ பண்ணுனா தான் உங்க படம் ஓடும்னு நெனச்சு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்களா? ஏற்கனவே விஜய் சேதுபதி மீது நெட்டிசன்கள் கோபத்தில் இருக்கிறாங்க என்பதை புரிந்து கொண்டு அவருடைய பட ஆடியோ லாஞ்சில் ஒரு தயாரிப்பாளராக நீங்க விஜய் பற்றி பெருமையாக பேசி அந்த சர்ச்சையை முடித்து வைத்திருக்கிறீர்களா? என்று பல கேள்விகள் குவிந்து கொண்டே இருக்கிறது.

    English Summary

    Atlee: While Vijay fans are sharing Atlee's speech at the *Pathu* audio launch as a fitting retort to Vijay Sethupathi, other netizens are poking fun at him, asking, "Did you notice what he said? He claims he doesn't know politics and won't speak about it, yet he switches his stance within just ten seconds.